இசைஞானியின்.... இசையில் இன்று வரை அனைவரையும் கவர்ந்த பாடல், எல்லா கிட்டார் வாத்திய கலைஞர்களையும் தொட்ட பாடல்...
கேட்டு பார்த்து சொல்லுங்கள் எப்படி என்று...
எல்லாரது பார்வையும் பேச்சும் ஜப்பானாக தான் இருக்கிறது..
எங்கும் எதிலும் ஜப்பான் தான் நிறைந்து நிற்கிறது, இயற்கையின் சீற்றம், அழிவின் கோரம், எதிர்கொண்டிருக்கும் அணுமின்நிலைய ஆபத்து என்றுநிலைமைஎம்மை நிலை குலையவைக்கின்றன.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கு மனசு சரியாவே இல்லை, இன்று நான் வீட்டிற்கு மதிய உணவிற்க்காகவந்த வேளை என்னால் சாப்பிடவே முடியவில்லை,
ஏதோ ஒப்புக்கு சாப்பிட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன்,எனது மகள் வந்தாள் அப்படியே அவளை கட்டியணைத்துகொண்டு கண்களில் கண்ணீர் மல்கபிராத்தனை செய்தேன் இறைவா அந்த மக்களுக்கு மேலும்மனதிடத்தை கொடு என்று.
நான் இதை எழுத நினைத்திருக்கவில்லை,ஆனால் இந்த நிகழ்வில் இருக்கும் படிப்பினையை நம் மக்களும் புரிந்து கொள்ளட்டுமே என்று தான் தொடங்குகிறேன்.