ஆகஸ்ட் 29, 2010

அதிசயம் - WONDER - தொடர்ச்சி


வொ்ண்டர் அவர்கள் பொதுவாழ்கையில் தனது பங்களிப்பை நிறையவே செய்து வருபவர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அரசியல், பொது நீதி, மனித உரிமைகள் போன்றவற்றிற்காக முழு வீச்சில் தொண்டாற்றி வரும் அதே நேரம் எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பிரச்சார பணிகளில் முன்னனியில் பங்காற்றுபவர்.

எல்லாவற்றையும் விட அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலை போராட்ட  வீரரும் அமெரிக்காவின் மகாத்மா என்ழைக்கபடும் மார்டீன் லூதர் கிங் அர்களது பிறந்தநாளை அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாளாக பிரகடனபடுத்த பெரும் பங்காற்றிய பெருமையை கொண்டவர். மேலும் இன்றைய உலகின் புதிய இசைதலைமுறையின் (Hip Hop) குருவாகவும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்பவர்.
    
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி திரு. ஒபாமா அவர்களின் தேர்தல் பிரசாரத்தில் அதி முக்கிய சக்திகளில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் "Signed, Sealed, Delivered I'm Yours" என்ற இவரது பாடலை திரு ஒபாமா செனட்டராக இருந்து ஜனாதிபதி வேட்பாளராக தன்னை பதிவு செய்த வைபவத்தில் Denver, Colorado's Invesco திடலில் ஏறத்தாழ 85,000 ஒபாமா ஆதரவாளர்கள் முன் இசைத்து பெரும் பாராட்டை பெற்றதோடு மட்டுமல்லாது. திரு.ஒபாமாவின் தொடர்ந்த மொத்த தேர்தல் பிரசாரத்தில் இந்த பாடலே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது என்பதும் சிறப்பம்சம். அவரது ஒரு புதிய இசை முயற்சிக்காக அமெரிக்க அரசாங்கத்தின் உயரிய விருதான Gershwin என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
 

ஆகஸ்ட் 27, 2010

அதிசயம் ...... WONDER !அமெரிக்காவில் மிச்சிகன் என்ற பிராந்த்தியன் செக்கினாவ் (Saginaw, Michigan) எனும் நகரத்தில் Calvin Judkins மற்றும் Lula Hardaway தம்பதியருக்கு 1950, மே 13ம் திகதி ஒரு குழந்தை பிறந்தது பெயர் Stevland Hardaway Judkins, அது தான் இன்று  ஸ்டீவி அல்லது ஸ்டீவ் வொண்டர் என்று அழைக்கப்பட்ட்டு உலக இசை ரசிகர்களை மொத்தமாக கொள்ளைகொண்ட Steve Wonder.

குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் ஆறுபேர் இவர் மூன்றாமவர், ஆறு வாரங்களுக்கு முன்னமே இவரது பிறப்பு நிகழ்ந்ததால் கண் விழித்திரைக்கு குருதியை கொண்டுவரும் வரும் ரத்த நாடிகள் போதிய வளாச்சில்லாத காரணத்தால் சிறு வயதிலேயே பார்வை குறைபாடு உள்ளவராக  பிறந்திருக்கிறார். குறை மாத பிரசவம் என்ற படியால் குழந்தையை இன்குயுபேட்டர் (Incubator) உள்ளே வைத்து, வெளியில் இருந்து கொடுக்கப்படும் மிஞ்சிய ஒக்சிஜன் அளவால் தான் நிலைமை இந்த அளவு மோசமடைந்தது என்று கூட ஒரு கருத்து உண்டாம்..

வொண்டருக்கு நான்கு வயது நிரம்பிய போது அவரது தாயார் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அவர்களது தந்தையை பிரிந்து வந்துவிட்டார். சிறு வயதிலேயே வொண்டர் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், மட்டுமல்லாது ஒரு சில இசைக்கருவிகளையும் வாசிக்க தெரிந்து கொண்டிருந்தார், இதில் மவுத் ஆர்கன் அல்லது ஹார்மோனிக்கா, பியானோ, ட்ரம்ஸ், மற்றும் பேஸ் என்பவை குறிப்பிடதக்கவை. மேலும் தேவாலயங்களில் உள்ள ஆலய பாடகர் குழாமில்  (Church Choir)  தவறராது இடம்பெரும் அங்கத்தவராக இருந்தாராம்.

வொண்டர் தனது 11வது வயதிலே தன் முதல் இசை வெளியீட்டை ஆரம்பித்தவர். 1961 வருடம் MOTOWN இசை வெளியீடு நிறுவனம் தான் அவரது முதல் ஆல்பத்தை வெளியிட்ட பெருமையை தட்டிக்கொள்கிறது. இன்றுவரை இந்த நிறுவனம் தான் இவரின் பாடல்களையும்,  இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

1961ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஸ்டீவி வொண்டர் மேலைத்தேய இசையுலகில் இசை ரசிகர்கள் மத்தியில் ஒரு அதியசயிக்கதக்க, பெரும் மதிப்பிற்குறியவராக போற்றப்படுகிறார்.

இசையுலகம் அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வாழும் கலைஞன் என்று போற்றுகிறது.

தற்போது 58 வயதாகும் இவர் பல முகங்களை கொண்டவர் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்றவாராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு,  
Vocals, synthesizer, piano,harmonica, drums, bass guitar,congas, bongos, clavinet,melodica, keytar போன்ற இசைக்கருவிகளில் மிகுந்த தேற்சியும்பெற்றவர். இன்றுவரை ஏராளமான பரிசுகளையும், பாரட்டுதல்களையும், பட்டங்களையும் தனதாக்கிக்கொண்டவர்.

தொடரும்….

திரும்பவும் கிறுக்கல்

எனக்கு பிடித்தவர்கள் அல்லது என்னை கவர்ந்தவர்கள்.

மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பவும் கிறுக்க துணிகிறேன்…., 

வெகு நாளாகவே எனக்குள் ஒரு ஆசை எனக்கு பிடித்த அல்லது என்னை ஏதோ ஒரு வகையில் கவர்ந்த நபர்களை விசயங்களை எழுதவேண்டும் என்று. 

நமக்கு பிடித்தது எல்லாம் மற்றவர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பதில்லை. தனிமனித விருப்பு வெறுப்பு என்பது அவர் அவரது தனிபட்ட விடயம்…. அது எவ்வாறாகவும் இருக்கலாம்…! 

இந்த வகையில் எனக்கு இசைதான் மிகவும் பிடித்த விடயம். அதனால் இந்த துறையில் எனக்கு தெரிந்தவர்களை என்னை கவர்ந்தவர்களை வியக்கவைத்தவர்களை பற்றி கிறுக்க நினைத்தேன் அவ்வளவுதான்!, 
படித்து பாருங்கள் பிடித்திருந்தால் பரவாயில்லை, இல்லாவிட்டால் திட்டுங்கள். அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே. 

நன்றி.