வொ்ண்டர் அவர்கள் பொதுவாழ்கையில் தனது பங்களிப்பை நிறையவே செய்து வருபவர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அரசியல், பொது நீதி, மனித உரிமைகள் போன்றவற்றிற்காக முழு வீச்சில் தொண்டாற்றி வரும் அதே நேரம் எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பிரச்சார பணிகளில் முன்னனியில் பங்காற்றுபவர்.
எல்லாவற்றையும் விட அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலை போராட்ட வீரரும் அமெரிக்காவின் மகாத்மா என்றழைக்கபடும் மார்டீன் லூதர் கிங் அர்களது பிறந்தநாளை அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாளாக பிரகடனபடுத்த பெரும் பங்காற்றிய பெருமையை கொண்டவர். மேலும் இன்றைய உலகின் புதிய இசைதலைமுறையின் (Hip Hop) குருவாகவும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்பவர்.
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி திரு. ஒபாமா அவர்களின் தேர்தல் பிரசாரத்தில் அதி முக்கிய சக்திகளில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் "Signed, Sealed, Delivered I'm Yours" என்ற இவரது பாடலை திரு ஒபாமா செனட்டராக இருந்து ஜனாதிபதி வேட்பாளராக தன்னை பதிவு செய்த வைபவத்தில் Denver, Colorado's Invesco திடலில் ஏறத்தாழ 85,000 ஒபாமா ஆதரவாளர்கள் முன் இசைத்து பெரும் பாராட்டை பெற்றதோடு மட்டுமல்லாது. திரு.ஒபாமாவின் தொடர்ந்த மொத்த தேர்தல் பிரசாரத்தில் இந்த பாடலே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது என்பதும் சிறப்பம்சம். அவரது ஒரு புதிய இசை முயற்சிக்காக அமெரிக்க அரசாங்கத்தின் உயரிய விருதான Gershwin என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
1961 ம் ஆண்டு தன் 11வயதில் இசையுலகில் பிரவேசித்து இன்றுவரை மேற்கத்தேய இசைதுறையில் உயரிய விருதாக கருதப்படும் 25 கிராம்மி அவார்ட்ஸ், அகாடமி அவார்ட், மற்றும் வாழ்நாள் சாதனையாளர் (Life time Achievement Award) என்று பல விருதுகளை அள்ளிச்சென்றவர். மட்டுமல்லாது அதிக தடவை கிராம்மி அவார்ட் வழங்கப்பட் ஓரே ஆண் தனிப்பாடகர் என்ற அந்தஸ்த்துக்கும் உரியவர். (a male solo artist).
இவரது 32 பாடல்கள் உலக அளவில் முதலாம் இடத்தில் நின்று 100 மில்லியனுக்கு மேல் விற்று தீர்ந்திருகின்றன..
ஸ்டீவி வொண்டர் தனது இசையுலக வாழ்வில் இன்ன பிற கலைஞர்களுடன் இணைந்து இசை பங்களிப்பை செய்திருக்கிறார். இதில் அநேகம் பேரை நமக்கு அறிமுகம் இல்லை இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடத்தில் பரிச்சியமும் புகழும் பெற்ற சிலரை குறிப்பிடுகிறேன்.
The Rolling Stones, உலகபுகழ்பெற்ற பீட்ல்ஸ் கலைஞர்களான John Lennon மற்றும் Paul McCartney, Jermaine Jackson (மைக்கல் ஜாக்சனின் சகோதரர்), Eurythmics, Elton John, John Denver, Michael Jackson, Sting, Prince மற்றும் Babyface போன்றவர்கள் மிகவும் குறிப்பிடதக்கவர்கள்.
ரேகே (Reggae) இசையின் தந்தை என்று வர்ணிக்கப்படும் Bob Marley, மற்றும் அவருடன் கூடி வேய்லர்ஸ் என்று அழைக்கப்படும் Peter Tosh மற்றும் Bunny Wailer ஆகியோருடன் இணைந்து வொண்டர் நடத்திய பார்வை இழந்தோர் அறகட்டளை நிதிக்காக வொண்டரின் கனவு விழா ("Wonder Dream Concert") இன்றும் வெகுவாக பேசுப்படுகிற நிகழ்ச்சிகளில் ஒன்று. 1975 ஒக்டோபர் 04ம் திகதி இந்த நிகழ்ச்சி பொப்-மார்லியின் சொந்த ஊரான ஜமேய்க்காவின் கிங்ஸ்டன் நகரில் இடம்பெற்றிருக்கிறது.
Babyface உடன் இணைந்து வெளியிட்ட “How Come How Long” என்ற பாடல் மிகவும் பிரபலம் வாய்ந்தவைகளில் ஒன்று காரணம் தார கொடுமையை (domestic violence) மையப்படுத்தி, அதை எதிர்த்து விமர்சித்து இருந்தது தான்.
ஒரு இரண்டு தசப்தங்களுக்கு பிறகு மீண்டும் 2008ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் தொடங்கி நெதர்லாந்து, சுவீடன், ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய இசை பயணத்தை நடத்தி முடித்தார், பெரும் புகழும் பெயரும் சம்மாதித்து தந்த இந்த இசைப்பயணம் அவரது வாழ்வில் ஒரு மைல்கல் என்று கூட சொல்ல்லாம்.
இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் மாத்திரம் 08 பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. அதுவும் லண்டணில் உள்ள O2 என்ற உள்ளரங்கதில் மட்டும் 04 பிரமாண்ட நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சியில் இசைத்த ஒரு பாடலை தான் இங்கு இணைத்துள்ளேன்….. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த ரசிசகர்கள் 120,000 பேருக்கும் மேல் என்று ஒரு கணக்கு சொல்கிறது என்பது ஒரு தகவல்.
பாருங்கள் ஒரு கலைஞன் தன் ரசிகர்களை எப்படி கட்டிப்போடுகின்றான் என்று…. மட்டுமல்லாது ரசிகர்கள் தனது அபிமான கலைஞனை எப்படி ஆர்பரித்து மகிழ்கிறார்கள் என்று.
இவரது அநேகமான காணொளிகள் Youtube வலைத்தலத்தில் இருக்கிறது, தேவையானவற்றை சொடுக்கி பார்த்து மகிழுங்கள்.
என்னை கவர்ந்த ஸ்டீவி வொண்டர் உங்களையும் கவர்ந்தாரா?..... அப்படியானால் உங்கள் வாக்குகளை கிளிக் செய்து செல்லுங்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக