செப்டம்பர் 16, 2010

தீடீர் பதிவு


இப்போதைக்கு இது தான் செய்தி,
பாருங்கள் படத்தை…….
அண்மையில் ஆரம்பமான மத்தியகிழக்கின் சமாதான பேச்சுவார்தை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்தது அனைவரும் அறிந்ததே!... ஆனால் அதுவல்ல பிரச்சினை… யார் தலைமை தாங்கி எல்லோரையும் அழைத்து சென்றது என்பது தான் இப்போதைய சர்ச்சை!.
 

எகிப்தின் அல்-ஹரம் என்ற தேசிய பத்திரிகை பிரசுரித்திருந்த படம். எகிப்தின் ஜனாதிபதி திரு. ஹுஸ்னி முபாரக் அமெரிக்க ஜானாதிபதி பராக் ஒபாமா உட்பட உலக தலைவர்களை வழிநடத்தி செல்வதாக உள்ளது முதல் படம்.
இரண்டாவது படம்
இதில் அமெரிக்க ஜானாதிபதி பராக் ஒபாமா உலக தலைவர்களை வழிநடத்தி செல்வதாக உள்ளது. இரண்டாவது தான் உண்மையானது என்றும் முதலாவது படம் போட்டோஷொப் மூலம் உருமாற்றி வெளியிடப்பட்டது என்றும் பிபிசி நிறுவனம் சொன்ன செய்தி தான்…… இப்போதைக்கு சூடான செய்தி….
என்னமோ போங்க பேச்சுவார்த்தை உருபட்ட மாதிரிதான்…… அப்பாவி பாலஸ்தீன மக்களின் பசி, பட்டினி, மற்றும் கஷ்டம் தீர்ந்த மாதிரிதான்…..
இது தான் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையோ?
நன்றி.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Nice one....