மார்ச் 08, 2011

எனது பள்ளிப்பருவ கிறுகல்கள்






எனது பழைய எழுத்துகளை, அதாவது கிறுக்கல்களை புரட்டிக்கொண்டிருக்கும் போது நான் கவிதை என்று நினைத்து கிறுக்கியவைகள் தென்பட்டன…..

அதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது, ஆனாலும் அந்த வயது கால நிகழ்வுகளை மீட்டி பார்க்க மனசு லேசான மாதிரியும் இருக்கிறது.
அந்த கிறுக்கல்களை உங்கள் பார்வைக்க்கும் வைக்கிறேன்…
பாருங்கள்...
நீங்களும் உங்கள் நினைவலைகளை மீட்டி பாருங்களேன்.....  


தேனே எனக்கு
தென்றலும்
தெரியவில்லை
திங்களும் மகிழ்ச்சியில்லை
தமிழும் புரியவில்லை
இசையும் லயிக்கவில்லை
உன் பித்தாகி போன எனக்கு
நீதான்
மருந்துக்கு சரக்கு
மயிலே
இது கூட புரியாதா
உனக்கு…..

பாத்தீங்களா!
ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்குல்ல.

கருத்துகள் இல்லை: