அமெரிக்காவில்
மிச்சிகன் என்ற பிராந்த்தியன் செக்கினாவ் (Saginaw, Michigan) எனும் நகரத்தில் Calvin Judkins மற்றும் Lula
Hardaway தம்பதியருக்கு 1950, மே 13ம் திகதி ஒரு
குழந்தை பிறந்தது பெயர் Stevland Hardaway Judkins, அது தான் இன்று ஸ்டீவி அல்லது ஸ்டீவ் வொண்டர் என்று அழைக்கப்பட்ட்டு
உலக இசை ரசிகர்களை மொத்தமாக கொள்ளைகொண்ட Steve Wonder.
குடும்பத்தில்
உடன் பிறந்தவர்கள் ஆறுபேர் இவர் மூன்றாமவர், ஆறு வாரங்களுக்கு முன்னமே இவரது
பிறப்பு நிகழ்ந்ததால் கண் விழித்திரைக்கு குருதியை கொண்டுவரும் வரும் ரத்த நாடிகள்
போதிய வளாச்சில்லாத காரணத்தால் சிறு வயதிலேயே பார்வை குறைபாடு உள்ளவராக பிறந்திருக்கிறார். குறை மாத பிரசவம் என்ற படியால் குழந்தையை இன்குயுபேட்டர்
(Incubator) உள்ளே வைத்து, வெளியில் இருந்து கொடுக்கப்படும்
மிஞ்சிய ஒக்சிஜன் அளவால் தான் நிலைமை இந்த அளவு மோசமடைந்தது என்று கூட ஒரு கருத்து
உண்டாம்..
வொண்டருக்கு நான்கு வயது நிரம்பிய போது அவரது தாயார் பிள்ளைகளை
கூட்டிக்கொண்டு அவர்களது தந்தையை பிரிந்து வந்துவிட்டார். சிறு
வயதிலேயே வொண்டர் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்,
மட்டுமல்லாது ஒரு சில இசைக்கருவிகளையும் வாசிக்க தெரிந்து கொண்டிருந்தார்,
இதில் மவுத் ஆர்கன் அல்லது ஹார்மோனிக்கா, பியானோ,
ட்ரம்ஸ், மற்றும் பேஸ் என்பவை குறிப்பிடதக்கவை.
மேலும் தேவாலயங்களில் உள்ள ஆலய பாடகர் குழாமில்
(Church Choir) தவறராது இடம்பெரும் அங்கத்தவராக இருந்தாராம்.
வொண்டர் தனது 11வது வயதிலே தன் முதல் இசை வெளியீட்டை
ஆரம்பித்தவர். 1961 வருடம் MOTOWN இசை வெளியீடு நிறுவனம் தான் அவரது முதல் ஆல்பத்தை வெளியிட்ட
பெருமையை தட்டிக்கொள்கிறது.
இன்றுவரை இந்த நிறுவனம் தான் இவரின் பாடல்களையும், இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
1961ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஸ்டீவி வொண்டர் மேலைத்தேய இசையுலகில் இசை ரசிகர்கள்
மத்தியில் ஒரு அதியசயிக்கதக்க, பெரும் மதிப்பிற்குறியவராக போற்றப்படுகிறார்.
இசையுலகம் அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வாழும் கலைஞன்
என்று போற்றுகிறது.
தற்போது 58 வயதாகும்
இவர் பல முகங்களை கொண்டவர் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்றவாராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு,
Vocals, synthesizer, piano,harmonica, drums, bass guitar,congas, bongos, clavinet,melodica, keytar
போன்ற இசைக்கருவிகளில்
மிகுந்த தேற்சியும்பெற்றவர். இன்றுவரை ஏராளமான பரிசுகளையும்,
பாரட்டுதல்களையும், பட்டங்களையும் தனதாக்கிக்கொண்டவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக