ஏப்ரல் 09, 2011

பத்தாண்டுகள் கரைந்துவிட்டன.....

பத்தாண்டுகள் கரைந்துவிட்டன

இது கவியோ இல்லை வசனமோ யான் அறியேன்
ஆனால்
மத்திய கிழக்கில் தொழில் பார்க்கும் ஒவ்வொருவரதும் வாழ்விலும் 
கொஞ்சமாவது  இந்த வார்தைகள் ஒட்டியிருக்கும் என நம்புகிறேன்.

படித்துவிட்டு புடிச்சிருந்தா ஏதாவது சொல்லீட்டு போங்க........





பத்தாண்டுகள் கரைந்துவிட்டன
பணம் தேடி வந்து
இந்த மண்ணுக்கு….
வருடங்கள் இரண்டு மட்டும் இருந்து விட்டு
திரும்பி விடவேண்டும் எப்படியும் ஊருக்கு.–
எடுத்த சபதம்.
வந்த நாளே இந்த ஊருக்கு.

கழிந்தது என்னவோ நாட்காட்டியில் தாள்களும்
கூடவே வயதும்
வாழ்வும் உறவும் ஊர் நட்பும்

கண்ட(து)தெல்லம் தேவைகளாகி
பணம் மட்டுமே தேவை என்றாகி
பத்தாண்டுகள் கரைந்துவிட்டன
பணம் தேடி வந்து இந்த மண்ணுக்கு

ஒவ்வொரு முறையும்
விடுமுறையில் வீடு போனால்
முதல் சந்திப்பில்
காண்போரெல்லாம் கேட்பது
எப்போ வந்தீங்க
கேள்வி சுகமாக இருக்கும்
இரண்டாம் மூன்றாம் தடவையில்
எப்போ போரீங்க திரும்ப”-
பழகிவிட்டது இதுவும் மனசுக்கு
பத்தாண்டுகள் கரைந்துவிட்டன
பணம் தேடி வந்து இந்த மண்ணுக்கு

இன்று
என் கடவுசீட்டில்
ஏடுகள் இல்லை
விடுமுறை விசா முத்திரை குத்த-
விண்ணப்பித்து விட்டு வந்தேன்
இன்னொரு புது கடவுசீட்டுக்கு
நாட்டைவிட்டு போய்விட அல்ல
மீண்டும் போய்வர.
பத்தாண்டுகள் கரைந்துவிட்டன
பணம் தேடி வந்து இந்த மண்ணுக்கு

சேர்த்ததென்வோ
குருதியில் சர்கரை
கொலஸ்ட்ரோல் விகித சமமின்மை
வைத்தியரின் மருந்து சீட்டுகள்
வகை வகையான மாத்திரைகள்
பத்தாண்டுகள் மட்டும் கரைந்துவிட்டன
பணம் தேடி வந்து இந்த மண்ணுக்கு.

இழந்தவை பட்டியலில்
எதை சேர்ப்பது எதை விடுவது
என்ற விவாத்திலேயே
பத்தாண்டுகள் கரைந்துவிட்டன
பணம் தேடி வந்து இந்த மண்ணுக்கு.

எதிர்காலம் என்னவோ
தெளிவின்றி தெரிகிறது
விரிந்து பரந்து எங்கள் முன்னால்
இந்த பாலைநிலம் போல்…….
பத்தாண்டுகள் கரைந்துவிட்டன
பணம் தேடி வந்து இந்த மண்ணுக்கு.!

கருத்துகள் இல்லை: