இலங்கை 2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.
இத்தனை சின்னநாடு 120 கோடி இந்திய மக்களை மகிழ்ச்சி அடைய செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்……..
இப்படி தான் இலங்கை ஜனாதிபதி கிரிகெட் வீரர்களுக்கான தனது விருந்துபசார நிகழ்வில் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன.
என் தனிபட்ட கருத்து என்னவெனில்
120 கோடி மக்கள் வேறு ஏதாவது காரணங்களுக்காக ஆசைபட்டாலும் நாம் விட்டு கொடுக்கவேண்டுமா?... அவர்கள் மகிழ்ச்சி தான் பிரதானம் என்றால் நாம் எங்கு இருக்கிறோம்?... எமது இறைமை, சுதந்திரம், தன்மானம் என்னவாவது?.
இதனால் வேறு சந்தேகங்களும் எழ வாய்பளிக்கின்றன…. ஒரு வேளை அத்தொகை மக்களின் மகிழ்ச்சிக்காவும் அரசியல் இறைமைக்கு பங்கம் வந்துவிடகூடாது என்ற உயரிய நோக்கில் தான் ஒரு இனத்தின் ஒரு பாதி பேரை அழித்தாரா?.
தனித்தாயகம் என்ற கோட்பாடு எப்போது எந்த காலகட்டத்தில் ஏன் எதனால் வந்தது என்பதை சற்று பதட்டபடாமல் நின்று நிதானித்தால் தெரியவரும். யார் மகிழ்ச்சிக்கு யார் வித்திட்டார்கள் என்று. உள்வீட்டு சண்டையை நாட்டு சண்டையாக்கி அதை பிராந்திய ஆதிக்கத்திற்கு சாதகமாக மாற்றியது மட்டுமல்லாது, தன்வீட்டுக்குள் யாரும் இது போன்ற கோரிக்கைகளை கொண்டிருக்க கூடாது என்ற தாயாள குணம் கொண்ட அத்தொகை மக்களின் மகிழ்ச்சி தான் நமக்குள் பிரதானம். அது தான் வேறு எதையும் பற்றி யோசிக்காமல் நமக்குள் அடித்துக்கொண்டோம், மட்டுமல்லாது நம்முள்ளும் அடித்துகொண்டோம் இன்னமும் அடிபடுகிறோம்.
அதற்கு கொடுத்த விலை தான் இன்று நாம் இருக்கும் நிலைமை. யாராவது இதை யோசித்தோமா இல்லை யோசிக்கிறோமா?. இந்த நிலைக்கு நாம் விரும்பியோ விரும்பாமலோ நிர்பந்திக்க படுவோம் என்று.
யார் காரணம் இதற்கு நாம் இருவரும் தான் காரணம். வேறு யாரும் இல்லை.
விளையாட்டை கடந்து… மற்ற விடயங்களை பற்றி யோசித்து பாருங்கள், இனி நாம் இருவருமே மற்ற எல்லாரது சுகங்களுக்கும், விருப்பங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் விலை போகக்கூடிய நிலையில் தான் வைக்கபட்டுள்ளோம் அல்லது அந்த நிலைமைக்கு ஆக்கபட்டுள்ளோம் என்பது தெரியவரும். இது தான் உண்மை. இதை மறுக்க முடியுமா?....
பிராந்திய அரசியல், கேந்திர முக்கியத்துவம் இதை பற்றி நமக்கு கவலையில்லை. தன் பலம் தெரியாத யானை மாதிரி.
பாருங்கள். எல்லாம் நாங்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ளும் நட்சத்திர கூட்ட கொடிகொண்ட நாட்டை, எனக்கு தெரிந்தவரையில் முதலில் வியட்னாம், பின்னர் ஈராக், ஆப்கானிஸ்தான் இப்போது லிபியா. தன் நாட்டு மக்களின் பொருளாதார மகிழ்ச்சிக்கு தானே இத்தனை சப்பைகட்டுகளும், தகிடுத்தங்களும். யார் ஆட்சிக்கு வந்தாலும் தன் நாட்டு கொள்கையில் மாற்றமில்லை, இந்தமாதிரி தான் இந்த ஆசிய பிராந்திய அரசியலும் என்பது நமக்கு மட்டும் பரியவேமாட்டேன்கிறது ஏனோ தெரியவில்லை.
நம்மை (இலங்கையை) யார் தனது முழு கண்காணிப்பில், தன் மக்களின் மகிழ்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்பது தான் இன்றைய தேதியின் ஆசிய பிராந்திய அரசியல் காய் நகர்த்தலின் நோக்கம்.
இதையுணர்ந்து நாம் எல்லாரும் செயற்பட்டாலொழிய திருந்தவோ, தப்பிக்வோ வாய்பேயில்லை. நாம தெரிந்தும் தெரியாமலும் ஒரே வீட்டில் எதிரியானது, எதிரியாகிறது, இன்னமும் இது தொடர்வது நாம மற்றவரின் மகிழ்ச்சிக்கு கொடுக்கும் விலை…
அடுத்த வாரம் இன்னும் யாரோவெல்லாம் வாராங்களாம்ஈ அவர்களதும் அவர்களது மக்களின் மகிழ்ச்சிக்கும் நாம என்னாத்த கொடுக்க போகிறோமோ.
அட போங்கப்பா நிறைய வருகிறது எழுத, ஆனால் வார்தைதான் வரமாட்டேன்கிறது.
இந்த இடத்தில் இன்னுமொரு அதிமுக்கிய சந்தேகம், ஒரு நேரம் விளையாட்டு மைதானத்தில் சென்ற விருந்தினரை ஒப்புக்காவது அத்தொகை மக்களின் உயர் அமைச்சர் உபசரித்து, கௌரவித்து, கொஞ்சம் ஆரவாரம் காட்டியிருந்தால் இந்த வார்தை வெளியில் வந்திருக்குமோ என்னமோ? அப்படி ஏதும் ஆகியிருந்திருக்குமானால் எல்லாரையும் மகிழ்ச்சியடைய செய்ததற்கு ஒட்டு மொத்த கேண இலங்கையர்கள் நாம் எல்லாரும் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.
ஆனால் பாவம் உயிரை பணயம் வைத்து விளையாடும் நம்ம வீரர்கள், அவர்களுக்காக நாம பெருமை பட்டுக்கலாம். இனம் மொழி மதம் மறந்து
என் மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன், இனி என்னை திட்டி தீர்த்துகுங்க. அப்பதானே நமக்குள்ள அடிச்சிக்கலாம் மத்தவுங்கள மகிழ்விக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக