வந்தது வந்தாகிவிட்டது,ஏதாவது பதிக்கனும்,எதைபத்தி எமுதலாம்ன்னு யோசிக்கையில்
ஏன் வரலைன்னு சொன்னா நல்ல இருக்குமுன்னு தோணிச்சு….
அது தான் கீழே:
முதல் காரணி 2006ன் கடைசிப்பகுதியில் எனது தொழில் மாற்றம் மற்றும் அது சார்ந்த தாக்கங்கள்.
மற்றது முக்கியமான ஒன்று,அது 2007ன் இறுதியில் எங்கள் குடும்பத்தின் புது வரவு என் மகள்.
இதன் பிறகு இந்த இரண்டு வருடமாக நான் என் கவனத்தை வேறு எதிலுமே செலுத்தவில்லை என்று கூட சொல்லலாம். என்னை பொறுத்தவரை ஆன்மீக உலகில் சொல்லப்படுகிற சொர்க்கம்,என்பது இறைவனால் மனிதனுக்கு உலகத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் தப்பில்லை என்று நினைக்கிறேன்.
ஒரு குழந்தையின் வரவிற்கு பின் மனிதனின் வாழ்கையில் தானாக ஏற்படுகின்ற மாறுதல்கள் தவிர்க்கபட இயலாத ஒன்றாகிறது, அதுவும் தாய் மண்ணை பிரிந்து தன் குடும்ப சுற்றாடலை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் போது வரக்கூடிய அனுபவம் அது ஒரு புதிய அனுபவம்.
புலம் பெயர்ந்து தங்கள் குடும்பத்துடன் வசிக்கும் எல்லாருக்கும் இதில் மாற்று கருத்து இருக்கும் என எனக்கு தோன்றவில்லை.அது தான் முன்னைய பதிவிலேயே சொல்லியிருந்தேன் தமிழர் அல்லாத தமிழர் வாழ்வியல் முறைகைளை கைக்கொள்ளாதவர்களுக்கு இது பொருந்தாது என்று.
அதுதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே…. சுதந்திரமாக எதைபற்றியும் கவலைப்டாது இருக்கும் இளைஞனை பார்த்து'அவனுக்கு ஒரு கால் கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று' எவ்வளவு அர்த்தம் பொருந்திய அனுபவம் பொதிந்த வார்தை,
நான் கூட ஒரு காலகட்டத்தில் இதெல்லாம் சுத்த பைத்தியகாரதனம் என்று நினைத்தது உண்டு.ஆனால் பாருங்கள் நம் முன்னோர்கள் யாரும் இன்று நாம் இருப்பது போல் இருந்திருக்கவில்லை, ஆனால் வாழ்வியல் அனுபவ முறைகளில் எவ்வளவு தன்னிறைவு அடைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
வள்ளுவன் சொன்னதை பாருங்கள்
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதார்".
இதைவிட என்ன வேண்டும் தமிழனின் பெருமையை சொல்ல
நண்பர்களே!
எனது இந்த இரண்டு வருட காலத்தில் வேலை தவிர்த்து எனக்கு கிடைத்த நேரத்தை நான் பகிர்ந்து கொண்ட,என் வாழ்வில் உள்ள அனைத்து சோகம் மறந்து, கவலைகளை துறந்து,செலவிட்ட அந்த கணங்களுக்கு சொந்தகாரியை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பார்த்துவிட்டு சொல்லுங்கள்,
வாழ்க வளமுடன்!
நான்காம் மாதம்
ஆறாம் மாதம்
ஒன்பதாம் மாதம்
பத்தாம் மாதம்
பதினோராம் மாதம்
முதலாம் பிறந்தநாள்
தற்போது ( 16-08-2008 ல் எடுத்தது)
2 கருத்துகள்:
வாழ்த்துக்கள் நண்பரே...
வாழ்த்துக்கள் நண்பரே...
கருத்துரையிடுக