ஆகஸ்ட் 29, 2008

கலைஞனுக்கு அஞ்சலி,


நண்பர்களே!

இலங்கையின் இசைத்துறையில் எல்லாருக்கும் பரிச்சயப்பட்ட ஒரு கலைஞன் திரு. நேசம் தியாகராஜா எம்மை விட்டு இம்மண்ணைவிட்டு பிரிந்து விட்டார்.


செய்தி- தென்றல் தொலைகாட்சி.


இவர் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இலங்கை இசைக்கலைஞர்களுக்கும் அறிமுகமும் பரிச்சயமானவர். கர்நாடக சங்கீத கலைஞனாக இருந்தபோதும், மேலைதேய தாள வாத்தியமான ட்ரம்ஸ் வாத்தியத்தில் வித்தகர், புகழுக்கு சொந்தகாரர் என்றால் மிகையில்லை.


ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணண் நேசம் என்ற இரட்டை இசையமைப்பாளராக இருந்து இலங்கையின் மெல்லிசைக்கு பெரும் பங்களிப்பை செய்தவர், நம் தேசத்திற்கேயுரிய பொப் இசைபாடல்கள் அநேகத்திற்கு இசையமைப்பாளர்.


கண்ணன் நேசம் அதே பெயரில் இசைக்குழுவாகவும் அந்த காலப்பகுதியில் பெரும் பிரபல்யம் பெற்றவர். இலங்கையின் மிகம்பிரபலம் பெற்ற சுப்பர் ஸ்டார் என்ற குழுவின் பிரதான ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக இருந்தவர். மேலும் பல இசைக்குழுக்களில் பங்காற்றியவர்.


இலங்கையில் சிங்கள மொழி இசைக்கு தனது பெரும் பங்களிப்பை செய்தவர் என்றால் தவறில்லை. எனக்கெல்லாம் முன்மாதிரியாயக இருந்தவர்,


கடந்த வாரம் இலங்கையில் உள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாகாநாட்டு மண்டபத்தில் ஒரு இசைநிகழ்சிசியில், மேடையில் இருந்துபோது தான் அவருக்கு இந்த மரணம் நேர்ந்திருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கிடைத்தற்கரிய, பெருமைமிக்க மரணம், ஆனால் அவரது குடும்பத்திற்கு அவரை சார்ந்தவர்களுக்கு, ஈடு செய்ய முடியாத இழப்பு.


அவரோடு சேர்ந்து 90 களில் ஒரே மேடையில் இசைநிகழ்சிகள் செய்யதவன் என்ற அளவில் புலம் பெயர்ந்து உலகம் முழுதும் வாழும் எண்ணற்ற இலங்கை இசைக்கலைஞர்கள் சார்பாக அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அவரைபிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
 
 
 

கருத்துகள் இல்லை: