மார்ச் 30, 2011

நல்ல விதைகளை விதைப்போம்… நாம் நல்ல தேசம் செய்வோம்

ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு வேறு வலைபதிவர்களின் பதிவை தொகுத்து, ஒரு பதிவாக வந்த ஒரு மின்னஞ்சலை பதிவிடுகிறேன்…

என்று பெறப்போகிறோம், இப்படிப்பட்ட குணாதிசயங்களை/நற்பண்புகளை?

பாருங்கள்……
மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்….

மார்ச் 16, 2011

நாம இப்படி செய்வோமா?.


எல்லாரது பார்வையும் பேச்சும் ஜப்பானாக தான் இருக்கிறது..
எங்கும் எதிலும் ஜப்பான் தான் நிறைந்து நிற்கிறது, இயற்கையின் சீற்றம், அழிவின் கோரம், எதிர்கொண்டிருக்கும் அணு மின்நிலைய ஆபத்து என்று நிலைமை எம்மை நிலை குலையவைக்கின்றன.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக எனக்கு மனசு சரியாவே இல்லை, இன்று நான் வீட்டிற்கு மதிய உணவிற்க்காக வந்த வேளை என்னால் சாப்பிடவே முடியவில்லை,

ஏதோ ஒப்புக்கு சாப்பிட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன்,எனது மகள் வந்தாள் அப்படியே அவளை கட்டியணைத்துகொண்டு கண்களில் கண்ணீர் மல்கபிராத்தனை செய்தேன் இறைவா அந்த மக்களுக்கு மேலும் மனதிடத்தை கொடு என்று.

நான் இதை எழுத நினைத்திருக்கவில்லை,ஆனால் இந்த நிகழ்வில் இருக்கும் படிப்பினையை நம் மக்களும் புரிந்து கொள்ளட்டுமே என்று தான் தொடங்குகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்.

மார்ச் 09, 2011

நல்லா சிரிங்க…..

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கப்பா……
படத்தை கிளிக் செய்து பாருங்கள், அப்பதான் நல்லா சிரிப்பீங்க! 
இதுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
என்னா ஒரு குசும்பு.....

மார்ச் 08, 2011

எனது பள்ளிப்பருவ கிறுகல்கள்






எனது பழைய எழுத்துகளை, அதாவது கிறுக்கல்களை புரட்டிக்கொண்டிருக்கும் போது நான் கவிதை என்று நினைத்து கிறுக்கியவைகள் தென்பட்டன…..

அதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது, ஆனாலும் அந்த வயது கால நிகழ்வுகளை மீட்டி பார்க்க மனசு லேசான மாதிரியும் இருக்கிறது.
அந்த கிறுக்கல்களை உங்கள் பார்வைக்க்கும் வைக்கிறேன்…
பாருங்கள்...

செப்டம்பர் 16, 2010

தீடீர் பதிவு


இப்போதைக்கு இது தான் செய்தி,
பாருங்கள் படத்தை…….
அண்மையில் ஆரம்பமான மத்தியகிழக்கின் சமாதான பேச்சுவார்தை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்தது அனைவரும் அறிந்ததே!... ஆனால் அதுவல்ல பிரச்சினை… யார் தலைமை தாங்கி எல்லோரையும் அழைத்து சென்றது என்பது தான் இப்போதைய சர்ச்சை!.
 

ஆகஸ்ட் 29, 2010

அதிசயம் - WONDER - தொடர்ச்சி


வொ்ண்டர் அவர்கள் பொதுவாழ்கையில் தனது பங்களிப்பை நிறையவே செய்து வருபவர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அரசியல், பொது நீதி, மனித உரிமைகள் போன்றவற்றிற்காக முழு வீச்சில் தொண்டாற்றி வரும் அதே நேரம் எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பிரச்சார பணிகளில் முன்னனியில் பங்காற்றுபவர்.

எல்லாவற்றையும் விட அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலை போராட்ட  வீரரும் அமெரிக்காவின் மகாத்மா என்ழைக்கபடும் மார்டீன் லூதர் கிங் அர்களது பிறந்தநாளை அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாளாக பிரகடனபடுத்த பெரும் பங்காற்றிய பெருமையை கொண்டவர். மேலும் இன்றைய உலகின் புதிய இசைதலைமுறையின் (Hip Hop) குருவாகவும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்பவர்.
    
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி திரு. ஒபாமா அவர்களின் தேர்தல் பிரசாரத்தில் அதி முக்கிய சக்திகளில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் "Signed, Sealed, Delivered I'm Yours" என்ற இவரது பாடலை திரு ஒபாமா செனட்டராக இருந்து ஜனாதிபதி வேட்பாளராக தன்னை பதிவு செய்த வைபவத்தில் Denver, Colorado's Invesco திடலில் ஏறத்தாழ 85,000 ஒபாமா ஆதரவாளர்கள் முன் இசைத்து பெரும் பாராட்டை பெற்றதோடு மட்டுமல்லாது. திரு.ஒபாமாவின் தொடர்ந்த மொத்த தேர்தல் பிரசாரத்தில் இந்த பாடலே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது என்பதும் சிறப்பம்சம். அவரது ஒரு புதிய இசை முயற்சிக்காக அமெரிக்க அரசாங்கத்தின் உயரிய விருதான Gershwin என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.