அக்டோபர் 19, 2008

அந்த குறுந்தகடு

இலங்கையில் என்ன நடக்கிறது என்று இப்பொழுதாவது மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவிய அந்த குறுந்தகடு அதை உருவாக்கியவர்க்கும் அல்லது உருவாக்கிய உணர்வாளர்கள் அனைவருக்கும் கோடி வணக்கங்கள்!
அதை வாசிக்கவைத்த குமுதம் ரிப்போர்டருக்கும் ஆயிரமாம் நன்றிகள்.

இன்று இந்த நிலைக்கு அதாவது சீடி பார்த்து இலங்கையில் உள்ள வடக்கில் வாழும் தழிழர் நிலையை உணரும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

இலங்கை அரசின் போர் தீவிரவாத்திற்கு எதிரானதும் தீவிரவாதிகளோடும் தான் என்றால் தனது நாட்டின் மக்களை பாதிக்காத வகையில் தான் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பொறுப்புடன் இருக்க வேண்டும் மற்றும் யுத்தம் குறித்த சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படடு யுத்தத்தை கொண்டு நடத்த வேண்டும்.

சர்வதேச அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள், சர்வதேச சமூகம், மற்றும் ஐநா போன்றவை என எல்லாம் இருந்தும் யாருமே கேட்பாரற்ற நிலையில் இலங்கையில் ஒரு இனம் வாழ வழியின்றி திக்கற்று நிற்கிறது. இன துவேஷம்; புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் பெரும்பான்மையிடத்தில் கொழுந்து விட்டு எறிகிறது.

இலங்கை அரசு தான் நினைத்தபடி காரியங்களை செய்ய வைத்தது எது?.
இவற்றுக்கெல்லாம் பிராந்தியம், அரசியல், அப்படி இப்படி என்று பெரும் வியாகியானங்களோடு எது சொன்னாலும் என்ன ஆராய்ச்சி செய்தாலும், முதல் காரணியாக இருப்பது தமிழனின் ஒற்றமைதான்.

ஒரு காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்திலே எதிர் கட்சி என்ற பலத்தோடு இருந்தது என்பதை எல்லாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி இருந்த இனம் இன்று சிடி மூலம் உலகுக்கு தன் நிலை தெரிவிக்க வேண்டிய நிலைக்கு வந்திருப்பது ஏன்? நமக்குள் ஒற்றுமை இல்லாது போனது தான்.

ஒரு வாதத்திற்காக இப்படி எடுத்துகொண்டு யோசித்து பாருங்கள் ஒரு வேளை இலங்கை அரசே சுய நிர்ணய உரிமை அல்லது தனி நாடு என்று நமக்கு கொடுத்திருந்தாலும் கூட நாமே நமக்குள் நீயா நானா, நீ வந்தாயா அல்லது நீ கேட்டாயா? நீ பெரியவனா நான் பெரியவனா அல்லது என் ஜாதி உன் ஜாதி என்று நமக்குள்ளே அடிபட்டு கிடந்திருப்போம். சற்று ஆழமாக யோசித்தால் இது தான் உண்மை. இந்த வேளையில் இதை சொல்வது வேதனைதான் ஆனாலும் இந்த சூழலுக்கும் இப்போதைய வேதனைக்கும் தள்ளப்பட இந்த ஒற்றுமையின்மை தானே காரணம்.

நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் இது நடக்குமா?
போதாதற்கு புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் நாம் செய்யும் அட்டகாசம் கொஞ்சமா?.... வெளிவரும் செய்திகளை பார்க்கும் போது நமக்கே வெட்கமாக இருக்கிறது. கோயில்கள் பெயரால், ஜாதிகள் பெயரால் என இப்படி நாம் பலவழிகளில் முட்டி மோதிக்கொள்கிறோமே!........ யார் சிந்திப்பது
வேண்டாம் நமக்குள் வேறுபாடுகள்!

எட்டுதிக்கெங்கிருந்தும் ஆதரவு குரல் வரட்டும் தமிழன் தலை மீண்டும் நிமிரட்டும் இலங்கை மண்ணில்.

ஆகஸ்ட் 30, 2008

நமது பூமி!

நாம் வாழும் பூமியை பால்வீதியில் இருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்ற கேள்விக்கு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம் எடுத்த படங்கள் கீழே.
இரவில் நமது பூமி எப்படி தெரிகிறது என்று பாருங்கள்.

ஆகஸ்ட் 29, 2008

கலைஞனுக்கு அஞ்சலி,


நண்பர்களே!

இலங்கையின் இசைத்துறையில் எல்லாருக்கும் பரிச்சயப்பட்ட ஒரு கலைஞன் திரு. நேசம் தியாகராஜா எம்மை விட்டு இம்மண்ணைவிட்டு பிரிந்து விட்டார்.


செய்தி- தென்றல் தொலைகாட்சி.


இவர் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இலங்கை இசைக்கலைஞர்களுக்கும் அறிமுகமும் பரிச்சயமானவர். கர்நாடக சங்கீத கலைஞனாக இருந்தபோதும், மேலைதேய தாள வாத்தியமான ட்ரம்ஸ் வாத்தியத்தில் வித்தகர், புகழுக்கு சொந்தகாரர் என்றால் மிகையில்லை.


ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணண் நேசம் என்ற இரட்டை இசையமைப்பாளராக இருந்து இலங்கையின் மெல்லிசைக்கு பெரும் பங்களிப்பை செய்தவர், நம் தேசத்திற்கேயுரிய பொப் இசைபாடல்கள் அநேகத்திற்கு இசையமைப்பாளர்.


கண்ணன் நேசம் அதே பெயரில் இசைக்குழுவாகவும் அந்த காலப்பகுதியில் பெரும் பிரபல்யம் பெற்றவர். இலங்கையின் மிகம்பிரபலம் பெற்ற சுப்பர் ஸ்டார் என்ற குழுவின் பிரதான ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக இருந்தவர். மேலும் பல இசைக்குழுக்களில் பங்காற்றியவர்.


இலங்கையில் சிங்கள மொழி இசைக்கு தனது பெரும் பங்களிப்பை செய்தவர் என்றால் தவறில்லை. எனக்கெல்லாம் முன்மாதிரியாயக இருந்தவர்,


கடந்த வாரம் இலங்கையில் உள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாகாநாட்டு மண்டபத்தில் ஒரு இசைநிகழ்சிசியில், மேடையில் இருந்துபோது தான் அவருக்கு இந்த மரணம் நேர்ந்திருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கிடைத்தற்கரிய, பெருமைமிக்க மரணம், ஆனால் அவரது குடும்பத்திற்கு அவரை சார்ந்தவர்களுக்கு, ஈடு செய்ய முடியாத இழப்பு.


அவரோடு சேர்ந்து 90 களில் ஒரே மேடையில் இசைநிகழ்சிகள் செய்யதவன் என்ற அளவில் புலம் பெயர்ந்து உலகம் முழுதும் வாழும் எண்ணற்ற இலங்கை இசைக்கலைஞர்கள் சார்பாக அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அவரைபிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
 
 
 

ஆகஸ்ட் 28, 2008

வடை திருடிய காகம்


நாமெல்லாம் சின்ன வயதில் பாட்டி வடை சுட காகம் தூக்கிகொண்ட போன கதை கேட்டிருக்கிறோம்.
எனக்கு மின் அஞ்சலில் வந்த நவீன வடை திருடல்
பற்றிய கதையை பாருங்கள்….


படம் 1
படம் 2


படம் 3


படம் 4



படம் 5

ஆகஸ்ட் 24, 2008

திரும்ப வந்து வந்துடோம்ல!

வந்தது வந்தாகிவிட்டது,ஏதாவது பதிக்கனும்,எதைபத்தி எமுதலாம்ன்னு யோசிக்கையில்
ஏன் வரலைன்னு சொன்னா நல்ல இருக்குமுன்னு தோணிச்சு….
அது தான் கீழே:
முதல் காரணி 2006ன் கடைசிப்பகுதியில் எனது தொழில் மாற்றம் மற்றும் அது சார்ந்த தாக்கங்கள்.
மற்றது முக்கியமான ஒன்று,அது 2007ன் இறுதியில் எங்கள் குடும்பத்தின் புது வரவு என் மகள்.
இதன் பிறகு இந்த இரண்டு வருடமாக நான் என் கவனத்தை வேறு எதிலுமே செலுத்தவில்லை என்று கூட சொல்லலாம். என்னை பொறுத்தவரை ஆன்மீக உலகில் சொல்லப்படுகிற சொர்க்கம்,என்பது இறைவனால் மனிதனுக்கு உலகத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் தப்பில்லை என்று நினைக்கிறேன்.
ஒரு குழந்தையின் வரவிற்கு பின் மனிதனின் வாழ்கையில் தானாக ஏற்படுகின்ற மாறுதல்கள் தவிர்க்கபட இயலாத ஒன்றாகிறது, அதுவும் தாய் மண்ணை பிரிந்து தன் குடும்ப சுற்றாடலை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் போது வரக்கூடிய அனுபவம் அது ஒரு புதிய அனுபவம்.
புலம் பெயர்ந்து தங்கள் குடும்பத்துடன் வசிக்கும் எல்லாருக்கும் இதில் மாற்று கருத்து இருக்கும் என எனக்கு தோன்றவில்லை.அது தான் முன்னைய பதிவிலேயே சொல்லியிருந்தேன் தமிழர் அல்லாத தமிழர் வாழ்வியல் முறைகைளை கைக்கொள்ளாதவர்களுக்கு இது பொருந்தாது என்று.
அதுதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே…. சுதந்திரமாக எதைபற்றியும் கவலைப்டாது இருக்கும் இளைஞனை பார்த்து'அவனுக்கு ஒரு கால் கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று' எவ்வளவு அர்த்தம் பொருந்திய அனுபவம் பொதிந்த வார்தை,
நான் கூட ஒரு காலகட்டத்தில் இதெல்லாம் சுத்த பைத்தியகாரதனம் என்று நினைத்தது உண்டு.ஆனால் பாருங்கள் நம் முன்னோர்கள் யாரும் இன்று நாம் இருப்பது போல் இருந்திருக்கவில்லை, ஆனால் வாழ்வியல் அனுபவ முறைகளில் எவ்வளவு தன்னிறைவு அடைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
வள்ளுவன் சொன்னதை பாருங்கள்
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதார்".
இதைவிட என்ன வேண்டும் தமிழனின் பெருமையை சொல்ல
நண்பர்களே!
எனது இந்த இரண்டு வருட காலத்தில் வேலை தவிர்த்து எனக்கு கிடைத்த நேரத்தை நான் பகிர்ந்து கொண்ட,என் வாழ்வில் உள்ள அனைத்து சோகம் மறந்து, கவலைகளை துறந்து,செலவிட்ட அந்த கணங்களுக்கு சொந்தகாரியை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பார்த்துவிட்டு சொல்லுங்கள்,
வாழ்க வளமுடன்!
மூன்றாம் மாதம்
நான்காம் மாதம்
ஆறாம் மாதம்
ஒன்பதாம் மாதம்
பத்தாம் மாதம்
பதினோராம் மாதம்
முதலாம் பிறந்தநாள்
தற்போது ( 16-08-2008 ல் எடுத்தது)

ஆகஸ்ட் 23, 2008

திரும்ப வருகிறேன்………..!

ஏறக்குறைய 3 ஆண்டுகள் கழிந்து விட்டது எனக்கு திரும்பி வர….,

கால ஓட்டத்தில் மனித வாழ்கை எப்படியெல்லாம் மாறுபாடு அடைகிறது என்பதை சரியாக உணரும் காலகட்டமாக கடந்த ஆண்டுகள் எனக்கு இருந்திருக்கிறது. கொஞ்சம் திரும்பிபார்த்தால் மனித வாழ்கையை எவ்வளவு விடயங்கள் தீர்மானிக்கின்றன, என்பதில் வியந்து நிற்கிறேன்.நான் சொல்வது தமிழர் அல்லாத தமிழரின் இந்த வாழ்வியல் முறைகளை கைகொள்ளாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்பவில்லை.

இனி அடிக்கடி வந்து, நான் பார்த்த படித்த கேட்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வேன்.

நன்றி