வொ்ண்டர் அவர்கள் பொதுவாழ்கையில் தனது பங்களிப்பை நிறையவே செய்து வருபவர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அரசியல், பொது நீதி, மனித உரிமைகள் போன்றவற்றிற்காக முழு வீச்சில் தொண்டாற்றி வரும் அதே நேரம் எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பிரச்சார பணிகளில் முன்னனியில் பங்காற்றுபவர்.
எல்லாவற்றையும் விட அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலை போராட்ட வீரரும் அமெரிக்காவின் மகாத்மா என்றழைக்கபடும் மார்டீன் லூதர் கிங் அர்களது பிறந்தநாளை அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாளாக பிரகடனபடுத்த பெரும் பங்காற்றிய பெருமையை கொண்டவர். மேலும் இன்றைய உலகின் புதிய இசைதலைமுறையின் (Hip Hop) குருவாகவும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்பவர்.
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி திரு. ஒபாமா அவர்களின் தேர்தல் பிரசாரத்தில் அதி முக்கிய சக்திகளில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் "Signed, Sealed, Delivered I'm Yours" என்ற இவரது பாடலை திரு ஒபாமா செனட்டராக இருந்து ஜனாதிபதி வேட்பாளராக தன்னை பதிவு செய்த வைபவத்தில் Denver, Colorado's Invesco திடலில் ஏறத்தாழ 85,000 ஒபாமா ஆதரவாளர்கள் முன் இசைத்து பெரும் பாராட்டை பெற்றதோடு மட்டுமல்லாது. திரு.ஒபாமாவின் தொடர்ந்த மொத்த தேர்தல் பிரசாரத்தில் இந்த பாடலே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது என்பதும் சிறப்பம்சம். அவரது ஒரு புதிய இசை முயற்சிக்காக அமெரிக்க அரசாங்கத்தின் உயரிய விருதான Gershwin என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.