ஒரு சிறு மாறுதலுக்காக படித்ததில் சுவைத்ததை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்
முத்துகமலம் என்ற இணையதளத்தில் நகைச்சுவை பகுதியில் படித்தது.
நன்றி தேனி.எஸ்.மாரியப்பன் - இணையத்திற்கு செல்ல
தபால்காரர் போயிட்டாரா...?
ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர்,
"உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.
அதற்கு அந்த தபால்காரர்,
"ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார்.
2 கருத்துகள்:
:)
:))
கருத்துரையிடுக