நவம்பர் 10, 2008

அந்த அழியாத கோலங்கள்

நேற்று வீட்டில் பழைய புத்தகங்கள் பைல்களை புரட்டிக்கொண்டிருந்தேன், ஒரு பழைய தமிழ் பாடல் ஒன்றைத்தேடி…. அப்பொது கிடைத்து தான் கீழேயிருக்கும் கிறுக்கல்.

என் நண்பண் ஒருவனுக்காக அவன் கடலை போட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு கொடுக்க எழுதியது….

முற்றுமுழுதாக தமிழ் திரைப்படங்களின் பெயர்களை மட்டும் கொண்டு ஒரு கவிதை என்று சொல்லி கிறுக்கியது. இப்போது அவன் அந்த பெண்ணையே திருமணம் செய்து செட்டிலாகி விட்டான் குழந்தை குட்டிகளோடு.

மகிழ்ச்சி சந்தோஷம் விளையாட்டுதனம் மட்டுமே நிறைந்த அந்த இளமைபருவ காலம் கோடி கொடுத்தாலும் ஈடு இணையாகாது.

இதோ கிறுகக்ல், பார்த்துவிட்டு நீங்களும் ஏதாவது கிறுக்கிட்டு போங்க


அன்பே!

சிவகாமியின் செல்வன் - உன்
புன்னகை மன்னன்
நான் பாடும் பாடல் - என்றும்
“புதுக்கவிதை” –

என் காதலை
சொல்லத்தான் நினைக்கிறேன் - தினம்
ஒன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்
இப்போது….
வைகாசி பொறந்தாச்சு –

ஆகவே...
தென்றலே என்னை தொடு
கண்ணே கனியமுதே! – நீ
நிறம் மாறாத பூக்கள்
ஆலயமணி
குங்குமச்சிமிழ்
கீதாஞ்சலி
சிட்டுக்குருவி
சிந்து பைரவி
சிவப்பு ரோஜா
புதுப்பாட்டு - அப்பப்பா !. . . . .

நினைத்தாலே இனிக்கும்.

கேளடி கண்மணி - அந்த
16 வயதினிலே
அம்மன் கோவில் கிழக்காலே
டார்லிங்! டார்லிங்! – படத்திலே
உன்னை நான் சந்தித்தேன்

அன்றுதான் எனக்கு
முதல் வசந்தம்

உன்,
பருவ மழை -கண்டு
புதுப்புது அர்த்தங்கள் -கொண்டு
நான் பாடிய
இதய கீதம்
புதிய ராகம்
வருஷம் 16 – போனாலும்
கடலோரக்கவிதையாய்
காற்றினிலே வரும் கீத(ம்)மாய் - வந்து
மண் வாசணை வீசும்

அடியே!
அன்னக்கிளி
ரோசாப்பு ரவிக்கைக்காரி
மீரா!...

உயிரே உனக்காக - என்றாய்

மாதங்கள் ஏ(ழு)ழில் - நம் காதல்
இருகோடுகள் - ஆனதென்ன

என் வாழ்வு உன்னோடு தான்- என்றாயே!
திசைமாறிய பறவை யாய் போனாயே
ஏன் ஏன்?

அரண்மணைக்கிளியே
பார் மகளே பார்
வசந்த மாளிகையை

இப்போது உன்
பூ விலங்கு
நாயகன்
சுவரில்லாத சித்திரங்கள்
பாலைவன ரோஜா
மூன்றாம் பிறை

வாழ்கை – இப்போது எனக்கு
புரியாத புதிர் –
பகலில் ஓர் இரவு

ஆகா!
அந்த 47 நாட்கள் - என்றும்
அழியாத கோலங்கள்

கருத்துகள் இல்லை: