அக்டோபர் 19, 2008

அந்த குறுந்தகடு

இலங்கையில் என்ன நடக்கிறது என்று இப்பொழுதாவது மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவிய அந்த குறுந்தகடு அதை உருவாக்கியவர்க்கும் அல்லது உருவாக்கிய உணர்வாளர்கள் அனைவருக்கும் கோடி வணக்கங்கள்!
அதை வாசிக்கவைத்த குமுதம் ரிப்போர்டருக்கும் ஆயிரமாம் நன்றிகள்.

இன்று இந்த நிலைக்கு அதாவது சீடி பார்த்து இலங்கையில் உள்ள வடக்கில் வாழும் தழிழர் நிலையை உணரும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

இலங்கை அரசின் போர் தீவிரவாத்திற்கு எதிரானதும் தீவிரவாதிகளோடும் தான் என்றால் தனது நாட்டின் மக்களை பாதிக்காத வகையில் தான் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பொறுப்புடன் இருக்க வேண்டும் மற்றும் யுத்தம் குறித்த சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படடு யுத்தத்தை கொண்டு நடத்த வேண்டும்.

சர்வதேச அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள், சர்வதேச சமூகம், மற்றும் ஐநா போன்றவை என எல்லாம் இருந்தும் யாருமே கேட்பாரற்ற நிலையில் இலங்கையில் ஒரு இனம் வாழ வழியின்றி திக்கற்று நிற்கிறது. இன துவேஷம்; புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் பெரும்பான்மையிடத்தில் கொழுந்து விட்டு எறிகிறது.

இலங்கை அரசு தான் நினைத்தபடி காரியங்களை செய்ய வைத்தது எது?.
இவற்றுக்கெல்லாம் பிராந்தியம், அரசியல், அப்படி இப்படி என்று பெரும் வியாகியானங்களோடு எது சொன்னாலும் என்ன ஆராய்ச்சி செய்தாலும், முதல் காரணியாக இருப்பது தமிழனின் ஒற்றமைதான்.

ஒரு காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்திலே எதிர் கட்சி என்ற பலத்தோடு இருந்தது என்பதை எல்லாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி இருந்த இனம் இன்று சிடி மூலம் உலகுக்கு தன் நிலை தெரிவிக்க வேண்டிய நிலைக்கு வந்திருப்பது ஏன்? நமக்குள் ஒற்றுமை இல்லாது போனது தான்.

ஒரு வாதத்திற்காக இப்படி எடுத்துகொண்டு யோசித்து பாருங்கள் ஒரு வேளை இலங்கை அரசே சுய நிர்ணய உரிமை அல்லது தனி நாடு என்று நமக்கு கொடுத்திருந்தாலும் கூட நாமே நமக்குள் நீயா நானா, நீ வந்தாயா அல்லது நீ கேட்டாயா? நீ பெரியவனா நான் பெரியவனா அல்லது என் ஜாதி உன் ஜாதி என்று நமக்குள்ளே அடிபட்டு கிடந்திருப்போம். சற்று ஆழமாக யோசித்தால் இது தான் உண்மை. இந்த வேளையில் இதை சொல்வது வேதனைதான் ஆனாலும் இந்த சூழலுக்கும் இப்போதைய வேதனைக்கும் தள்ளப்பட இந்த ஒற்றுமையின்மை தானே காரணம்.

நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் இது நடக்குமா?
போதாதற்கு புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் நாம் செய்யும் அட்டகாசம் கொஞ்சமா?.... வெளிவரும் செய்திகளை பார்க்கும் போது நமக்கே வெட்கமாக இருக்கிறது. கோயில்கள் பெயரால், ஜாதிகள் பெயரால் என இப்படி நாம் பலவழிகளில் முட்டி மோதிக்கொள்கிறோமே!........ யார் சிந்திப்பது
வேண்டாம் நமக்குள் வேறுபாடுகள்!

எட்டுதிக்கெங்கிருந்தும் ஆதரவு குரல் வரட்டும் தமிழன் தலை மீண்டும் நிமிரட்டும் இலங்கை மண்ணில்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அந்த குறுந்தகட எங்களுக்கும் காட்டலாமே

pls remove word verification

பெயரில்லா சொன்னது…

விடிவிற்காக காத்திருப்போம்..

துளசி கோபால் சொன்னது…

நல்லாச் சொல்லி இருக்கீங்க.

//. யார் சிந்திப்பது
வேண்டாம் நமக்குள் வேறுபாடுகள்! //

இதுதான் சிந்திக்கவேண்டிய தருணமும்கூட.


இந்த வேர்ட் வெரிஃபிகேஷனைத் தூக்கிட்டீங்கன்னா பின்னூட்டுபவர்களுக்கு எளிது.

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

பின்னூட்டமிட்ட எல்லாருக்கும் நன்றி

நசரேயன் சொன்னது…

அருமையாக சொல்லி இருக்கீங்க