பிப்ரவரி 10, 2009

சிரிக்கலாம் வாங்க!

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்று எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்ததை அப்படியே தருகிறேன். என்னமா யோசிக்கிறாங்கப்பா! கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு.


1.வாழ்க்கை என்பது பனை மரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!
2. லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். உதாரணம்.
நமீதா எவ்வளவு பெரிய நடிகை ஆனா அவுங்க இவ்வளவு பாப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தானே காரணம்.
3. வகுப்பறை என்பது ரயில் மாதிரி முதல் இரண்டு பெஞ் வீ ஐ பி (VIP) நடுவில் இரண்ட பெஞ் பொது (General) கடைசியில இரண்டும் தூங்கும் பெஞ்!(Sleeper)

கவிதை வடிவில் அதுவும் ஹைகூ வடிவில் யோசித்திருக்காங்க பாருங்க!
4. அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை – எக்ஸாம் ஹாலில்……!
5. 3 G A P A 6 = ?....
யோசிங்க ……
என்னா எடிசனுக்கு போட்டியா யோசிப்பீங்களே! இது கூட தெரியாதா?
விடை: மூஞ்சிய பாரு……
6. வாழ்கையில வெற்றி ன்னா என்னனு தெரியுமா?
அடைமழை பெயும் போது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான்,
இன்னுமா புரியலை அட WET TREE!
7. தினந்தோரும் என் பிராத்தனை
எனக்கு எதுவும் வேண்டாம் கடவுளே! என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும் - அது போதும் எனக்கு.

குறிப்பு:-
என்ன செய்ய!, ஒன்னுமே செய்ய முடியாத போது பைத்தியம் போல சரி சிரிச்சிக்கிட்டு இருப்போம்;

கடவுளே!
எல்லாரும் எங்கள பாத்து சிரிக்கிற மாதிரி வைத்துவிட்டாயே!
ஜோசப் இருதயராஜ்

8 கருத்துகள்:

rapp சொன்னது…

:):):)

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

இணையத்தில் ஏற்கனவே படித்து உள்ளேன்.. இருந்தாலும் சிரிக்க வைத்ததற்கு நன்றி..

ராஜ நடராஜன் சொன்னது…

வித்தியாச சிரிப்பு:)

வேத்தியன் சொன்னது…

கலக்கல் நகைச்சுவை...
:-)

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

வந்து பார்த்து சிரித்து கருத்து சொன்ன
பாண்டியன், நடராஜன் மற்றும் வேத்தியன்
எல்லாருக்கும் நன்றிகள்

ஜோசப் இருதயராஜ்

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

ஆகா rapp ஐ விட்டுட்டேனே!
உங்களுக்கும் நன்றிகள்

Massy spl France. சொன்னது…

நமீதா சின்ன ட்ரெஸ் மற்றும் "3 G A P A 6" சூப்பர்.

பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஜோசப் இருதயராஜ்.

சஞ்சயன் சொன்னது…

மிகவும் ரசித்தேன் நண்பரே!

தொடருங்கள்.. வந்து போகிறேன்