நவம்பர் 05, 2008

மாற்றம் வருகிறது.

பூமி பந்தின் தலைசிறந்த ஜனநாயக நாடு என்று போற்றப்படுவதும், வாய்புகளின் இருப்பிடம் என்று கூறப்படுவதுமான அமெரிக்காவில் இன்று ஓரு புதிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது… எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் இது பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக திரு. பராக் ஒபாமா என்பவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்,

அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை., அமெரிக்க வெள்ளை இனத்தவர் மத்தியில் ( பரவலாக இல்லாவிட்டாலும் அது தான் உண்மை) ஒடுக்கப்பட்டு இரண்டாம் தர சமூகமாக கருதப்படும் ஒரு சமூகத்திலிருந்து அந்நாட்டை 21ம்நூற்றாண்டின்; பாதையில் நடத்தி செல்ல ஒரு தலைவனை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.

ஒரு தொலைக்காட்சி தொடரை நான் 90 களில் பார்த்திருக்கிறேன் ROOTS (வேர்கள்)என்று.
எப்படி ஆபிரிக்க கறுப்பினத்தவாகள் அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டு வரப்படுகிறார்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்ன என்ன, பின்னாளில் இவற்றிலிருந்து எப்படி இம்மக்கள் விடுதலை ஆனார்கள், எவ்வாறு அந்நாட்டின் குடிகளானார்கள் என்று இருக்கும்.

இவ்வாறு நிற வெறியினால் பீடிக்கப்படடு இருந்த அமெரிக்கர்கள் இன்று நிறம், மற்றும் சமூக வேறுபாடுகளை மறந்து இன்று ஒன்று பட்டு நிற்பதை பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் ஒடுக்கப்பட்ட சமூகம் எங்கும் எந்த காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழாது என்பதாகும்.

இன்று தொலைக்காட்சியில் காட்டப்படும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி ஆரவாரம் என்பவற்றை பார்க்கும் போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. அதே நேரம் மனசுக்குள் சற்று பயமாகவும் இருக்கிறது. இவ்வாறாக காட்டப்படும் பெரும் மக்கள் செல்வாக்கை கண்டு பொறாமை கொள்ளும் கயவர்களும் பாதகர்களும் இருப்பார்கள், மாற்றம் கொண்டுவர மாறுதலாய் வந்த நிற்கும் இம் மனிதனுக்கு இவர்களால், ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று.

ஏனெனில் பழைய அமெரிக்க வரலாறுகளை எடுத்து பார்த்தால் நல்ல ஆட்சியாளர்களை அந்த நாடு நெடுநாட்கள் கொண்டிருந்ததில்லை.

ஏற்கனவே செய்திகளில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டார்கள் என்று கூறி இருவரை கை செய்திருப்பதாக இரு வாரங்களுக்கு முன் பி.பி.சி செய்திகளில் சொல்லப்பட்டது. அதற்கு பின் அந்த செய்தி அப்படியே இல்லாது போய்விட்டது.

எந்த தொந்தரவுகளும் ஆபத்துகளும் நேராது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்கவும், ஒடுக்கபட்ட சமூகம் என்ற பெயரில் இருந்த ஒரு இனம் புதிய யுகம் காணவும், அமெரிக்க வெளிவிவகார கொள்கைகளில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படவும் வாழ்த்தி நிற்போம்.!

2 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மாற்றங்கள் ஏமாற்றங்களாக இல்லாமலிருந்தால் சரிதான்

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

//ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
மாற்றங்கள் ஏமாற்றங்களாக இல்லாமலிருந்தால் சரிதான் //


கருத்துரைக்கு நன்றி,