கொழும்பிலே!... மீண்டும் கோவிந்தா,
நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கிறது, அதுவும் கொழும்பிலே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் ராணுவம் மற்றும் போலீஸ் உசார் நிலையில் இருக்கிறது. சோதனை சாவடிகள்.... சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், இத்தியாதி இத்தியாதி......
ஆனால் கொழும்பில் மீண்டும் சுடரொளி பத்திரிகை அழுவலகம் குண்டு வீசிதாக்கப்ட்டு இருக்கிறது. இதில் ஒருவர் பலியாகியிருக்கிறார், மற்றும் மூவர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
பாருங்கள் இவ்வளவு பாதுகாப்பிற்குள்ளும், தைரியமாக மோட்டார் சைக்கிளிலே வந்து தாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
இதில் என்ன பெரிய விஷேசம் என்றால், இன்று காலை இலங்கையில் இருந்து வெளிவந்திருக்கும் தினசரி பத்திரிகைகளில் அதுவும் தமிழ் மொழி அல்லாத எந்த பத்திரிகைகளிலும், (அதாவது சிங்கள மொழி அல்லது ஆங்கில மொழி பத்திரிகைகள்) இந்த விடயம் பற்றி தலைப்பு செய்தியாகவோ அல்லது முன்பக்க வசய்தியாகவோ வரவில்லை. டெயிலி நியூஸ் பத்திரிகை மட்டும் செய்தியை வெளியிட்டு இருந்தது.
இவ்வளவு தான் ஊடகங்களின் ஒற்றுமையும், ஊடக ஜனநாயகமும்!
இதிலிருந்து என்ன தெரிகிறது.....,
அட போங்கப்பா..!..!...!
தூங்குறவன எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவன எழுப்ப முடியுமா?.....
தயானந்தா எங்கே.....! ?.
கடந்த வாரம் வெக்டோன் தொலைக்காட்சியின் இலங்கை கலையக பொறுப்பாளர், திரு.தயானந்தாவுக்கு கொலை மிரட்டல் செய்தி பற்றி எனது பதிவில் பதிந்திருந்தேன்.
அதன் பிறகு விடியல் நிகழ்சியில் இன்று வரை தாயானாந்தாவை காணவில்லை, அவரை நிகழ்ச்சியிலிருந்து நீக்கிவிட்டதா வெக்டோன் தொலைக்காட்சி, அல்லது அவர் நமக்கேன் வம்பு என்று விலகிவிட்டாரா?.... அல்லது கொஞ்சம் சூடு தணியட்டும் பிறகு தலைகாட்டுவோம் என்று விடுப்பில் சென்று விட்டாரா?. தெரியவில்லை
என்ன இருந்தாலும் அவர் இல்லாதது விடியல் நிகழ்ச்சியில் ஒரு இடைவெளி தெரிகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அவரது கிண்டலும், கேலியும், கூடி நமட்டுசிரிப்பு என்று சொல்வார்களே அந்த ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்புடனுமான, அவரது அரசியல் அல்லது நடப்பு சம்பவங்கள் நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்களும் கருத்துகளும் மிகவும் ரசிக்க கூடியவை......,
என்ன செய்ய
எதையுமே தொடர்ந்து அனுபவிக்க முடியாது அல்லது கூடாது எனபது தானே
தமிழன் தலையெழுத்தாகி போயிருக்கிறது இலங்கையை பொறுத்தவரை!.
பத்திரிகை சுதந்திரம் கோயிந்தா!.... கோயிந்தா!
2 கருத்துகள்:
பதிவுக்கும்,கருத்துகளுக்கும் நன்றி.நிகழ்வுசார்ந்து எழுதுகிறீர்கள்.நனறாக இருக்கிறது.உங்களுக்கு ஒரு சிறப்பு ஓட்டுப்போடுமமென்டால்... அது முடியாதிருக்கிறது.எதற்காக இந்த நட்ஷத்திரம் ஒழுங்காக வேலை செய்வதில்லை?தமிழ்ச் சூழலில் நியாயம் கேட்டு உரையாடினால்-எழுதினால் பலருக்கு நடந்தமாதிரி... தயாநந்தா இன்னும் கொஞ்சக்காலம் உயிர்வாழ ஆசைப்பட்டிருக்கலாம்.
திரு.ரன்ஙன்!
வந்து போனதுக்கும்
குறிப்புக்கும்
நன்றிகள்!
இப்போ நட்சத்திரம்
ஒழுங்கா வேலை செய்கிறது
கருத்துரையிடுக