ஜனவரி 13, 2005

சுனாமி வந்தது தொடர்ந்து என்ன வந்தது?......

சுனாமியும்....! இந்து சமுத்திரத்தின் எதிர்காலமும், -
ஆசிய நாடுகளின் எதிர்காலமும்.
மார்கழி மாதம் 25ம் திகதி யேசுபிரான் பிறந்நத தினத்தை கொண்டாடி மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சி வடியும் முன், கிழக்காசியாவின் சுமாத்திரா தீவின் வட முனையில் சூல் கொண்டு உருவாகி புறப்பட்டு இந்து சமுத்திரத்தின், ஆசிய மற்றும் தெற்காசியாவின் ஏறக்குறைய ஒன்பது நாடுகளின் கரையோரப்பகுதிகளை ஒட்டுமொத்தமாக சூறையாடி வெல்லமுடியாத நாசத்தையும், சொல்லில் அடங்காத சேதத்தையும், வரலாறு மறக்கமுடியாத பெரும் சோகத்தையும் விட்டு சென்றுள்ள இந்த சுனாமி என்ற பெயரால் கொள்ளபடும் ஒரு கடல் ஆக்கிரமிப்பு, ஆசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் எதிர்காலத்தையும் அதன் அரசியல் பொருளாதார மற்றும் பிராந்திய ஒற்றுமையை பெரும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது என்றால் அதில் எந்த தவறும் இருக்க முடியாது.

மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்திய கொள்கைக்கு சவாலாக அண்மைகாலங்களாக ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகள், அரசியல், பொருளாதார, மற்றும் தொழில்நுட்பத்தில் வெகு வேகமாக முன்னேறிவருவது பெரும் கண்கூடு. ஆதலால் மேற்குநாடுகள் பெருத்த ஆச்சர்ய நிலைக்கு தள்ளப்பட்டமை, ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்புகளின் பழைய செய்திகளை கிரமமாக கவனித்தால் தெரியும்.

அவையெல்லாவற்றையும் விட செப்டெம்பர் 11 என சரித்திரத்தில் ஏடு பிடித்த அந்த நிகழ்வு உலகில் பயங்கரவாத்தின் ஒரு புதிய பரிமாணமாக உருவெடுத்தது என்பதும் கூட எல்லோரும் அறிந்ததே! அந்த சம்பவம் ஏகாதிபத்திய நாடுகளில் எல்லாம் ஏற்படுத்திய தாக்கங்கள் சமூக அரசியல் அலைகள் மற்றும் மாற்றங்கள், அதன் பின் அந்த நாடுகள் செய்த கைங்கரியங்கள், ஒட்டுமொத்தமாக உலகில் உள்ள எல்லா விடுதலை போராட்டங்களையும் பயங்கரவாத்திற்குள் தள்ளப்பட்டு தடை செய்யபட்டமையும் நன்கு அறிவோம். இவ்வாறு பய்ங்கரவாத்திற்கு எதிரான போர்,உலக வர்த்தக தராளமயமாக்கல் என்ற போர்வையில் இன்று எங்கு எங்கு அந்த நாடுகள் கால் வைத்துள்ளன என்பது கூட எல்லாரும் அறிந்த ஒன்று, சொல்ல தேவையில்லை. ஆனாலும் ஆசிய கண்டத்தில் எவ்வாறு கால் பதிக்கலாம் என்று சமயம் பார்த்துகொண்டிருந்த வேளையில் தான் இந்த "சுனாமி" அந்த நாடுகளின் "ஆர்மி" களை கொண்டு வந்து மீட்புப்பணி என்ற பெயரில் இறக்கியிருக்கிறது.

ஆசிய கண்டத்தில் இலங்கையின் முக்கியத்துவம்
நடந்தேறிய அழிவு அனர்த்தங்களில் அதிக பாதிப்பு இலங்கை தான் சந்தித்திருக்கிறது,இவ்வாறு இருக்க அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவதளங்களில் ஒன்று ஹவாய் தீவில் உள்ளது,

செப்டெம்பர் 11 க்கு பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு தனது படைகளை இங்கிருந்து தான் நகர்த்த அமெரிக்கா பெரும் சிரமபட்டது....., காரணம் அதிக தூரம், மேலும் ரஷ்யா வழியான அண்டை
நாடுகளின் வான் பரப்பையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம், அதற்கு அந்த அந்த வான் பரப்புகளுக்கு சொந்தமான நாடுகள் ஒப்புதல் அளிக்காமை,.... இப்படி பல.

இந்த நிலையில் வியட்னாமில் தனது தளம் இல்லாத நிலையிலும், பிலிப்பைன் நாட்டிலும் இருந்த தளம் மூடப்பட்ட நிலையிலும், அது பெரும் சிரமத்தை மேற்கொண்டது, ஆனாலும் எப்படியோ ஒருவாறு ஹாங்காங்கில் உள்ள தனது சிறிய தளம் ஊடாக, பாகிஸ்தானையும் வளைத்து கையில் போட்டுகொண்டு நாடகத்தை ஆரம்பித்ததும் அதன் பின் செய்த வேலைகள் எல்லாம் உலகம் அறிந்த ஒன்று..... இது இப்படிஇருக்க இந்து சமுத்திரத்திலும் ஆசிய கண்டத்திலும் இந்தியா ஒரு சக்தியாக உருவெடுக்க ஆரம்பித்தமை அமெரிக்காவுக்கு பெரிய தலைவலி, மறுபக்கம் சீனா, வடகொரியா போதாகுறைக்கு அல்கய்தா அமைப்பு தனது இயக்க வேலைகளுக்கு இந்தோனேசியாவை தளமாக கொண்டதும் அதற்கு பெரும் சிக்கலை சேர்த்தது. ஆகவே இவையெல்லாவற்றையும் ஒரே இடத்திலிருந்து கையாள (கவனிக்க) புவியியல் ரீதியாக வலுவான அதுவும் எல்லா ராணுவ முஸ்தீபுகளுக்கும் இசைவான ஒரு இடம் அமெரிக்காவின் உடனடி தேவையாக இருந்தது.

இதன்படி இலங்கையை குறிவைத்து தன் காய்களை வெகு காலமாகவே நகர்த்தி வந்திருக்கிறது..., அதன்படி தான் அமெரிக்க வானொலி சேவையான Voice of America வை நிறுவ முயற்சித்தது.., அதற்கு இலங்கையில் ஏற்பட்டிருந்த எதிர்புகள்,ஆர்பாட்டங்கள் அதை சற்று பின் வாங்க வைத்தது போல் மக்களுக்கு காட்டப்பட்டது. கடலுக்குள் போய் திரும்பி வந்த சுனாமி போல்.

அதன் பிறகு எப்படி நெருங்குவது என்ற செயலின் ஒரு பகுதிதான் விடுதலை புலிகளை தடைசெய்யதுதது, திடீரென சமாதான பேச்சுகள் ஆரம்பிக்கபட வேண்டும், ஒற்றை ஆட்சி,என்று அறிக்கைகள், அழுத்தங்கள் என அதன் செயற்பாடுகள் அமைந்தன என்பது அனைவரும் அறிந்ததே! பின்னர் 2004ம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில் அமெரிக்க ராணுவத்தின் சிலரை இலங்கைக்கு பயிற்சி என்ற பெயரில் அனுப்பியது நினைவிருக்கும், அதாவது கொரில்லா போர் முறைகளை எப்படி சமாளிப்பது என்று இலங்கை ராணுவம் பெரும் அனுபவம் கொண்டிருக்கிறது, அந்த அனுபவத்தை நாங்கள் பயின்றுகொள்வே வந்திருக்கிறோம் என்று சொல்லி அனுப்பிவைத்திருந்ததும் எல்லாருக்கும் நினைவிருக்கும்.

அதை இலங்கைபத்திரிகைகள் ஒரு சில கூட எழுதி பெருமைபட்டுக்கொண்டன என்றும் நினைக்கிறேன். வந்தவர்கள் என்ன செய்தார்கள்? நாங்களும் பயின்றோம், பார்வையிடுகிறோம் கடைசியில் பயிற்சி அளிக்கிறோம் என்றார்கள், பிறகு இலங்கை கடற்படைக்கு ஒரு கப்பலை தருகிறோம் என்றார்கள், அதுவும் ஹவாய் ராணுவ தளத்தில் சும்மா நிறுத்தி வைக்கபட்டிருந்ததும் சிறிய சிறிய சிப்பந்தி வேலைகளை செய்ய பயன்பட்டதுமான ஒரு பழைய கப்பலை. இப்போது இறந்த வீடுகளுக்கு துக்கம் விசாரிக்க எல்லாரும் வருவது போல், அழையாமலே அழைப்பை பெற்று உள்ளே வந்துவிட்டார்கள் மீட்பு பணி என்ற பெயரில், ஆனால் துக்க வீடுகளுக்கு வந்தவர்கள் காரியம் முடிய திரும்பிவிடுவார்கள்.ஆனால் இவர்கள் இங்கு நிரந்தரமாகவே தங்கிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே தோன்றுகிறது. சரி வந்தவர்கள் இது வரை எந்தவொரு மீட்புப்பணியிலும் ஈடுபடவில்லை, அதைவிடுத்து நிலைமையை ஆராய்கிறோம் என்ற போர்வையில் ராணுவ கடற்படை முகாம்களை அமைப்பதில் தான் தீவிரம் காட்டிவருவது தெரிகிறது.

சில வேளைகளில் சர்வதேச நாடுகளின் அமுக்கம் காரணமாக அவர்கள் கொஞ்ச நாட்களில் திரும்பி போகலாம், ஆனால் குறிப்பாக இலங்கையின் கடற்படையை அதி நவீனபடுத்திவிட்டே போவார்கள் என்றால் மிகையில்லை. அதுவும் இலங்கையின் தெற்கு, கிழக்கு, வடக்கு, பிராந்தியங்களில் அதிநவீனபடுத்தபட்ட தளங்களை அமைத்து அங்கிருந்து ஆசிய கண்டத்தை கட்டுபடுத்த முனையலாம் இலங்கையூடாக. ஆக இதனால் நவீனப்படபோகும் இலங்கை ராணுவம் தன் கை ஓங்கியதில் புலிகளுடனான பேச்சுகளை நிறுத்தவும், ஒரு யுத்தத்தால் அவர்களை அடக்கவும் முனையலாம்.
ஆக இது முதன் முதலில் இலங்கையின் எதிர்கால சாமாதான சுழலையும், அரசியல் இணக்கபாட்டையும் பெரும் பாதிப்புக்குள்ளக வாய்பிருக்கிறது.

மேலும் பிறகு ராணுவ தளபாட புணரமைப்பு அல்லது சீரமைத்தல் என்ற பெயரில் அடிக்கடி அமெரிக்கா தனது ஆட்களை அனுப்பிகொண்டே இருக்கும், அப்படி ஆகும் நிலையில் அமெரிக்கா தொடர்ந்தும் இந்து சமுத்திரத்தில் சுதந்திரமாக இருக்கவே செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அப்படியாயின் மத்தியகிழக்கில் படையணி நகர்வு செய்யவும் அதை புணரமைக்கவும் தொடர்ந்து அந்த பிராந்தியத்தில் நிலைகொள்ளவும் ஏதுவாக அமையும், மேலும் ஆசியாவில் உள்ள தனது ஆதிக்கத்துக்கும் கொள்கைகளுக்கும் உட்படாத நாடுகளை வேவு பர்க்கவும், அண்டை நாடுகளுக்கிடையில் ஒரு பதற்றத்தையும், ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கவும் காரணப்படலாம்.

ஆக நீண்ட ஆசையொன்று அமெரிக்காவுக்கு கைகூடுகிறது என்றால் மிகையில்லை. மட்டுமல்லாது சர்வதேச பயங்கரவாதத்தை அடக்க தான் என்று கூறி, இலங்கையில் இருந்துகொண்டு இந்தோனேசியாவுக்குள் கால் பதிக்கலாம்.

எப்படி பார்த்தாலும் இந்த சுனாமி ஏகாதிபத்தியமிக்க வல்லாதிக்க நாடுகளுக்கு பெரும் திறவு
கோலாக அமைந்தது என்பது வெளிவராத சோகம். இருந்தாலும் இதற்காக இப்படி ஒரு வாய்பிற்காக, யாராவது செயற்கையாக இந்த அனர்த்ததை ஏற்படுத்தி இருக்கலாமோ? என்ற ஊகங்களும் சந்தேகங்களும் எழாமல் இல்லை, இதற்கு காலமும், கடவுளும் மட்டுமே பதில்
சொல்ல முடியும்

இந்தியா என்ன செய்யபோகிறது?....
இலங்கை பிரச்சினை தொடர்பாக இந்திய கொள்கையில், திரு. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின்னர் பெரிய மாற்றம் ஏற்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்தியவும் இதற்கு பிறகு சற்று அசட்டுதனமாகவே இருந்து விட்டது, இலங்கை அரசை அப்படியே ஏமாற்றலாம் என்று நினைத்திருக்க கூடும், புலிகளை ஆதரிப்பதிலும் பயம், காரணம் ஆதரித்தால் உள்நாட்டில் உள்ள தனது நிலைப்பாட்டை நியாயபடுத்த முடியாது என்ற நிலை, இருக்கபோக, இப்போது நிலைமை வேறு விதமாக மாறிவிட்டது.இது இந்தியா தனது கொள்கை வகுப்பதில் தொலை தூர நோக்கோடு செயற்படாது விட்ட பெறும்ட தவறு என்றாலும் மிகையில்லை.

இனி இலங்கை தனது இனப்பிரச்சினை காரணமாக இந்தியாவை நேரடியாக நாடாது, அல்லது அழைக்காது என்றே நம்பலாம். காரணம் அமெரிக்காவின் உதவி. இது இப்படி இருக்க இந்தியாவின் வடக்கே அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான பாகிஸ்தான், கீழே அமெரிக்காவின் புதிய தோழன், ஆக இனி இந்தியவுக்கு இருபக்கமும் சமாளிக்கவேண்டிய நிர்பந்தம். இது சில நேரங்களில் இந்தியாவின் உள்நாட்டு ஒற்றுமையை குழைக்க கூட பெரும் சந்தர்ப்பம் உள்ளதாக கருத இடமுண்டு. இதற்கு இந்தியா என்ன செய் போகிறது என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது தவிர உடனே இந்தியா அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு கொண்டிருக்கும்மற்ற ஆசிய நாடுகளுடனான உறவை பலப்படுத்த முனையலாம், அல்லது அவ்வாறான நாடுகளை ஒன்று திரட்ட முனையலாம், இவ்வாறு பார்க்கும் சந்தர்பத்தில் சீனா, வடகொரியா, மலேசியா,... மற்றும் இதர நாடுகள் எல்லாம் ஒன்று கூடும் பட்சத்தில் மொத்த இந்து சமுத்திரத்திர பரப்பும் ஆசிய நாடுகளின் வளர்ச்சியும் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும் அபாயம் உள்ளது என்றால் யாரும் மறுக்க முடியாது.

ஆக மொத்ததில் இந்த "சுனாமி" முதலில் இலங்கை தமிழர்களின் உணர்வு போராட்டத்தை, சம
அந்தஸ்த்தோடு கூடிய வாழ்கை எதிர்பார்ப்பை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டிவிட்டது என்று எண்ண தோன்றுகிறது. இரண்டாவதாக மொத்த ஆசிய பிராந்திய அமைதி நிலையை,அரசியல் நிலைமைகளை, மேறகுலக வல்லாதிக்கத்தின் வாயின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது

1 கருத்து:

Kasi Arumugam சொன்னது…

Dear Joseph, Could you write to me please?

kasi @ thamizmanam . com

Thanks,