என்னத்த
சொல்ல....!,
கடந்த 30 வருட காலமாக பிரச்சினை இருந்தாலும் ஒரு 20 வருட காலமாக தான் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது நினைத்திருந்தால் இந்த புண்ணாக்கு சமூகம், இப்போ எடுக்கிற ஒரு கடும் போக்கை அப்போது எடுத்து இரண்டு பேரையும் அழைத்து ஏதாவது பண்ணியிருக்கலாம், பண்ணவில்லை ஏன்? அப்போது அவர்களுக்கு தேவை தனது ஆயுதங்களை சந்தை படுத்த ஒரு இடம், பத்தோடு பதின் ஒன்றாவதாக ஒரு ஒரு இடம் இருக்கிறது ஆகவே இரண்டு பக்கமும் விற்று முடிந்தவரை காசு பார்க்கலாம் என்ற எண்ணம்.
சரி பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று நடந்தது ஞாபகம் இருக்கலாம் அப்போது சரி யாராவது இந்த புண்ணாக்குகள் வந்து மத்தியஸ்தம் பண்ணியிருக்கலாம், அல்லது தொடந்த பேச்சு வார்தைக்கான ஒரு பாதையை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போதெல்லாம் அவர்களுடைய எண்ணம், இது உள்நாட்டு பிரச்சினை, அவர்களாகவே தீர்த்து கொள்ளட்டும் என்பதான நடிப்பு. பேச்சு வார்த்தை முறிந்தபோது கூட ஒரு மூச்சும் இல்லை இந்த சமூகங்களிடமிருந்து. (நோர்வே மட்டும் வந்து போனது அது வேறு கதை)
அடுத்தது இறுதி கட்ட போரின் போது இதே ஆதிக்க நாடுகள், வடபகுதியிலிருந்து பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்றவை தனது செயற்பாடுகளை நிறுத்தி வெளியேறுகையில் அந்த மக்கள் கதறினார்களே எங்களை விட்டு போக வேண்டாம் என்று அப்போது எங்கே போயின?. அப்படி அவர்கள் அங்கிருந்திருந்தால் பொது மக்களுக்கு நேர்ந்த பரிதாபங்களை தவிர்த்திருக்கலாம். நடந்தது படுகொலை இன சுத்திகரிப்பு என்றெல்லாம் இப்போது கொக்கரிக்காமல் வேறு வேலைகளை பார்த்திருக்கலாம்.
இப்போது மட்டும் எதற்கு இந்த ஆடுபுலி ஆட்டம் எல்லாம், இலங்கைக்கு உதவவா? அப்படி நாம் நினைத்தால் மீண்டும் தமிழனுக்கும் இலங்கைக்கும் வெவ்வே!
சமகால உலக வர்த்தக, அரசியல், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆதிக்கம் போன்றவற்றில் கடந்த ஓரிரு வருடத்தில் உலகம் முழுவதிலம் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை கண்கூடு. ஆகவே ஆசியபிராந்திய, அரசியல், வியாபார, ஆதிக்க, இராணுவ நெறிபடுத்தல், போன்றவற்றிற்காக தற்போதைய நம் நிலைமையை வியாபாரம் ஆக்கி குட்டையை குழப்பி குழம்பிய நீரில் மீன்பிடிக்க தான் இந்த திட்டம், தீர்வு அல்லது சாட்சியில்லாத, நிரூபிக்க முடியாத முதலை கண்ணீர் எல்லாம்.
கடைசியில் நண்பனாய் இருந்த அல்லது இருக்கிறதாய் காட்டிய அல்லது காட்டுகிற அண்டை நாடும் இலங்கை நலனில் தன் லாபநட்ட கணக்குகளை போட்டு பார்த்ததில் இலங்கை பொறுட்டு வரும் லாபத்தை விட மற்ற வகையில் லாபம் அதிகம் இருப்பதாக கண்டு என்னவோ மெல்ல ஜகாவாங்க பார்க்கிறது… என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் நாமும் நமக்குள் பிளவுபடுவதை விடுத்து நம் இருவருமே மனசு விட்டு பேசி நாமே தீர்த்துகொண்டால்……. என்ன!
(நினைக்கவே புல்லரிக்கிறது போகாத ஊருக்கு பாதை போட்ட கதை மாதிரிதான் தெரியும் ஆனால் எதுவும் சாத்தியம்).
நாமும் நம்முள்ளும் தெரியாது போல் பலர் நடிக்கிறார்கள் அல்லது உணர்ந்தும் செயல் பட மறுக்கிறார்கள். இதை அரசாங்கம் உணருமா?... அல்லது அரசாங்கம் என்ற போர்வையில் இருக்கும் பிரிவினைவாதிகள் உணர்வார்களா?.. என்பது தான் விடையில்லாத வினா, இனியும் பிரிவினை பேசினால் கோவணம் கூட மிஞ்சுவது கடினமாகலாம். தகாத வார்த்தைகளை உதிர்வது ஆப்பிலுத்த குரங்குக்கு ஒப்பாகலாம்
திருடராய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பதற்கிணங்க எல்லாரும் திருந்தினால் (இதில் ஒரு சில தமிழ் பிரிவினை வாதிகளுக்கும் தான்)
சுபீட்ச இலங்கை நிச்சயம்…., அல்லது
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..
“ நானொரு
முட்டாளுங்க - ரொம்ப நல்லா
தெரிஞ்சவுங்க நாலு பேரு சொன்னாங்க”!....
இலங்கையை
பொறுத்தவரையிலும், அதன் பிரச்சினையை பொறுத்தவரையிலும்,
சர்வதேச சமூகம், அப்படி இப்படி என்பதெல்லாம் வெறும்
புண்ணாக்கு அவ்வளவு தான். மொத்த பூமிபந்தில் உள்ள ஆதிக்க நாடுகளும் சரி, ஆதிக்கத்தை வலுபடுத்த
உருவாகும் நாடுகளும் சரி… நம்மை (இலங்கையை) பார்ப்பது
இந்த இளிச்ச வாயன்களை எப்படி பயன்படத்திகொள்ளலாம் என்பதை பற்றி மட்டுமே!...
கடந்த 30 வருட காலமாக பிரச்சினை இருந்தாலும் ஒரு 20 வருட காலமாக தான் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது நினைத்திருந்தால் இந்த புண்ணாக்கு சமூகம், இப்போ எடுக்கிற ஒரு கடும் போக்கை அப்போது எடுத்து இரண்டு பேரையும் அழைத்து ஏதாவது பண்ணியிருக்கலாம், பண்ணவில்லை ஏன்? அப்போது அவர்களுக்கு தேவை தனது ஆயுதங்களை சந்தை படுத்த ஒரு இடம், பத்தோடு பதின் ஒன்றாவதாக ஒரு ஒரு இடம் இருக்கிறது ஆகவே இரண்டு பக்கமும் விற்று முடிந்தவரை காசு பார்க்கலாம் என்ற எண்ணம்.
சரி பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று நடந்தது ஞாபகம் இருக்கலாம் அப்போது சரி யாராவது இந்த புண்ணாக்குகள் வந்து மத்தியஸ்தம் பண்ணியிருக்கலாம், அல்லது தொடந்த பேச்சு வார்தைக்கான ஒரு பாதையை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போதெல்லாம் அவர்களுடைய எண்ணம், இது உள்நாட்டு பிரச்சினை, அவர்களாகவே தீர்த்து கொள்ளட்டும் என்பதான நடிப்பு. பேச்சு வார்த்தை முறிந்தபோது கூட ஒரு மூச்சும் இல்லை இந்த சமூகங்களிடமிருந்து. (நோர்வே மட்டும் வந்து போனது அது வேறு கதை)
அடுத்தது இறுதி கட்ட போரின் போது இதே ஆதிக்க நாடுகள், வடபகுதியிலிருந்து பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்றவை தனது செயற்பாடுகளை நிறுத்தி வெளியேறுகையில் அந்த மக்கள் கதறினார்களே எங்களை விட்டு போக வேண்டாம் என்று அப்போது எங்கே போயின?. அப்படி அவர்கள் அங்கிருந்திருந்தால் பொது மக்களுக்கு நேர்ந்த பரிதாபங்களை தவிர்த்திருக்கலாம். நடந்தது படுகொலை இன சுத்திகரிப்பு என்றெல்லாம் இப்போது கொக்கரிக்காமல் வேறு வேலைகளை பார்த்திருக்கலாம்.
இப்போது மட்டும் எதற்கு இந்த ஆடுபுலி ஆட்டம் எல்லாம், இலங்கைக்கு உதவவா? அப்படி நாம் நினைத்தால் மீண்டும் தமிழனுக்கும் இலங்கைக்கும் வெவ்வே!
சமகால உலக வர்த்தக, அரசியல், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆதிக்கம் போன்றவற்றில் கடந்த ஓரிரு வருடத்தில் உலகம் முழுவதிலம் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை கண்கூடு. ஆகவே ஆசியபிராந்திய, அரசியல், வியாபார, ஆதிக்க, இராணுவ நெறிபடுத்தல், போன்றவற்றிற்காக தற்போதைய நம் நிலைமையை வியாபாரம் ஆக்கி குட்டையை குழப்பி குழம்பிய நீரில் மீன்பிடிக்க தான் இந்த திட்டம், தீர்வு அல்லது சாட்சியில்லாத, நிரூபிக்க முடியாத முதலை கண்ணீர் எல்லாம்.
கடைசியில் நண்பனாய் இருந்த அல்லது இருக்கிறதாய் காட்டிய அல்லது காட்டுகிற அண்டை நாடும் இலங்கை நலனில் தன் லாபநட்ட கணக்குகளை போட்டு பார்த்ததில் இலங்கை பொறுட்டு வரும் லாபத்தை விட மற்ற வகையில் லாபம் அதிகம் இருப்பதாக கண்டு என்னவோ மெல்ல ஜகாவாங்க பார்க்கிறது… என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் நாமும் நமக்குள் பிளவுபடுவதை விடுத்து நம் இருவருமே மனசு விட்டு பேசி நாமே தீர்த்துகொண்டால்……. என்ன!
(நினைக்கவே புல்லரிக்கிறது போகாத ஊருக்கு பாதை போட்ட கதை மாதிரிதான் தெரியும் ஆனால் எதுவும் சாத்தியம்).
நாம், நம் இலங்கை தன் இனங்கள் சார்பில் அது கற்று வந்த பாடங்கள் 1968 லிருந்து இன்றுவரை
யாரும் தெரியாதது அறியாதது அல்ல.
நாமும் நம்முள்ளும் தெரியாது போல் பலர் நடிக்கிறார்கள் அல்லது உணர்ந்தும் செயல் பட மறுக்கிறார்கள். இதை அரசாங்கம் உணருமா?... அல்லது அரசாங்கம் என்ற போர்வையில் இருக்கும் பிரிவினைவாதிகள் உணர்வார்களா?.. என்பது தான் விடையில்லாத வினா, இனியும் பிரிவினை பேசினால் கோவணம் கூட மிஞ்சுவது கடினமாகலாம். தகாத வார்த்தைகளை உதிர்வது ஆப்பிலுத்த குரங்குக்கு ஒப்பாகலாம்
திருடராய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பதற்கிணங்க எல்லாரும் திருந்தினால் (இதில் ஒரு சில தமிழ் பிரிவினை வாதிகளுக்கும் தான்)
சுபீட்ச இலங்கை நிச்சயம்…., அல்லது
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக