ஜனவரி 28, 2009

கைவிடப்பட்டு போயினோமா?

நண்பர்களே….

இந்த நவீன உலகில் அன்றாடம் ரணப்பட்டு போன மனிதனுக்கு அவனது மனதுக்கு களிம்பு பூசுவது போன்றதான ஆறுதல் வார்தைகள் எவ்வளவு அவசியம் என்பது எல்லாரும் உணர்ந்த ஒன்று.

இன்று எனக்கு வந்த இந்த மின்னஞ்சலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகிறேன்.

இப்படியாக தான் நம்மை நாமே ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாம மட்டும் என்ன பாவம் பண்ணிணோமோ தெரியவில்லை இந்த கடவுள்; எங்களை மட்டும் இன்னும் பார்(கா)க்க வரவில்லையே



















Awesome!!
We complain about the cross we bear but don't realize it is preparing us for the dip in the road that God can see and we cannot.

Whatever your cross,
Whatever your pain,
There will always be sunshine, after the rain....
Perhaps you may stumble, perhaps even fall;
But God's always ready, to answer your call....
He knows every heartache, sees every tear,
A word from His lips, can calm every fear...
Your sorrows may linger, throughout the night,
But suddenly vanish, by dawn's early light...
The Savior is waiting, somewhere above,
To give you His grace, and send you His love.

May God fill your day with blessings!!

Be kinder than necessary, for everyone you meet is fighting some kind of battle!

6 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

Meaningful.

தேவன் மாயம் சொன்னது…

There will always be sunshine, after the rain....
Perhaps you may stumble, perhaps even fall;
But God's always ready, to answer your call....
He knows every heartache, sees every tear,
A word from His lips, can calm every fear..///

your writing is very
supportive!!
thank U
What God is doing for the
dying children of Lanka/

தேவன் மாயம் சொன்னது…

நாம மட்டும் என்ன பாவம் பண்ணிணோமோ தெரியவில்லை இந்த கடவுள்; எங்களை மட்டும் இன்னும் பார்(கா)க்க வரவில்லையே

கடவுள் அவர் பொறந்த ஊர்
பிர்ச்சினையையே
தீர்க்க முடியாம
இருக்கார்..

Jayakumar சொன்னது…

நன்றி!

Tamil சொன்னது…

எம் அன்பார்ந்த தமிழக மக்களே!,

ஈழத்தமிழ் உறவுகளிற்காக நீங்கள் செய்யும் தவத்திற்கு தலைவணங்குகின்றோம்.

ஈழத்தமிழினத்தை வேரோடழிக்க கங்கணம் கட்டினிற்கும் சிங்கள அரசுக்கு பக்கபலமாய் அவர்களோடு ஒத்தூதும் கேவலம் கெட்ட, தமிழனிற்கு பிறக்காத தன்மானம் கெட்ட சில தமிழக அரசியல் தலைவர்களை நினைக்கும் போது மிகவும் மனவேதனையாக இருக்கிறது......

அது மட்டுமா; தமிழகத் தமிழ் இராணுவத்தளபதிகள் கூட இன்று ஈழத்தமிழனிற்கு எதிராக வரலாறு பல கொண்ட எம் வன்னி மண்ணில் படை நடத்துகிறார்கள்...... உங்களிற்கு இது தெரியாமல் இருக்காது....இதற்கு எதிராய் என்ன செய்தீர்கள்?....... தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் செயலாக அல்லவா இருக்கிறது....

இந்த இராணுவ தளபதிகளின் பெண்டாடிகள் பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் மிகவும் நலமாக மூன்று வேளையும் உணவுண்டு, உறங்கி எழுகிறார்கள் உங்கள் வரிப் பணத்தில் தானே......... அவர்களை தட்டி கேட்கும் தைரியம் உங்களிற்கு இல்லாமல் போனது ஏன்? அவர்களின் பிள்ளைகள், உறவுகள் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் பாவம் நீங்கள் மட்டும் உண்ணாமல் உறங்காமல் விழித்திருக்கிறீர்கள்.... இவை மட்டும் விடியலை பெற்றுத்தங்துவிடுமா..............?

காந்தீயம் செத்து இற்றைக்கு ஐம்பது வருடங்களிற்கு மேலாகின்றது.... உங்கள் உண்ணாநோன்புகளை உங்கள் அரசியல் தலைவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள், உங்களிற்கு தெரியுமா?. அண்ணன் திலீபனும் அன்னை பூபதியும் உண்ணாநோன்பிருந்து இறந்து போனது தான் வரலாறு....


எம் அருமை தமிழக உடன்பிறப்புகளே!, இது உங்கள் உடலை வருத்தும் நேரமல்ல; உங்களை பலப்படுத்தும் நேரம்.......... இது புரட்சி வெடிக்க வேண்டிய பருவம்...... தவறினால் வரலாற்று தவறிளைத்தவர்களாவீர்கள். காந்தி பிறந்த மண்ணில் தான் சுபாஸ் சந்திரபோஸும் பிறந்தான்..... இன்று எங்களிற்கு தேவைப்படுவதெல்லாம் சுபாஸ் சந்திரபோஸ் தான். புரிகிறதா தமிழா!.

ஆண்டாண்டு காலமாய் தன்னகத்தே அளப்பரிய பாரம்பரியங்களையும், வரலாற்று விழிமியங்களையும், மொழியியல் புலமைகளையும், தனக்கென தனியரசையும் கொண்டு வாழ்ந்த ஈழத்தமிழினம் இன்று அழிவின் விழிம்பில் நிற்கிறது.......

இன்று ஈழத்தில் நடப்பது " மூன்றாம் உலக யுத்தம்..." தழிழக மக்களே புரிகிறதா உங்களிற்கு... உலகத்தின் அத்தனை வல்லரசுகளிற்கு எதிராகவும் யுத்தம் புரிகிறான் மானத்தமிழன் ஈழத்தில். எம் மக்கள் உங்கள் உணவில் பங்கு கேட்கவில்லை, உங்கள் உடையில் பாதி கேட்கவில்லை... எங்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாய் வாழ உரிமை கேட்கிறார்கள்.....

தமிழக உடன்பிறப்புகளே, முடிந்தால் ஒன்று செய்யுங்கள்.....உங்கள் பச்சோந்தி அரசியல் தலைவர்களையும், பணத்திற்காய் தமிழனை கொன்று குவிக்க துணை போகும் தமிழக இராணுவ தளபதிகளையும் தடுத்து நிறுத்துங்கள்....... இன்று வன்னி மண்ணிலே எம் உறவுகள் செத்து மடிகிறார்கள் இந்திய இராணுவத்தளபதிகளின் திட்டமிடலாலும், இந்திய அரசினது ஆயுத உதவியாலும்..... எங்களை கொல்லவா நீங்கள் வரிப் பணம் செலுத்துகின்றீர்கள்.... தடுத்து நிறுத்து தமிழா; இல்லையேல் எம் லச்சாதி லட்சம் மக்களின் பறிக்கப்பட்ட உயிர்களிற்கும், இழக்கப்பட்ட அவயவங்களிற்கும், பெற்ற வதைகளிற்கும் ஒரு நாள் உங்கள் நாடு விலை கொடுக்க வேண்டி வரும்...

இன்று எம் மக்களை அகதியாக்கி, அனாதையாக்கி, அடிமையாக்கி, பிணமாக்கி, முடமாக்கி விட்ட இராணுவத் தளபதிகளின் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ, பூட்டப்பிள்ளைகளோ, இதை எல்லாம் தடுக்க திராணியில்லாததால் உன் எதிர்காலச் சந்ததியோ இதற்கான விடையை சொல்லியே ஆகவேண்டும்....... ஆகவே எழுவாய் எம் தமிழகத் தமிழா புயலாய்.... உரிமையுடன் கேட்கின்றோம் உங்களிடம்; எழுவாய் தமிழா எரிமலையாய். எம் அண்ணன்களாய், எம் தம்பிகளாய், எம் அக்காக்களாய் எம் தங்கைகளாய், எம் தாயாய், எம் தந்தையாய், எம் உணர்வாய், எம் உயிராய் எழுவாய் தமிழா புதுப் பொலிவுடன் பாரதி கணட மானத்தமிழனாய்.......... எஞ்சியிருக்கும் ஒரு துளி உயிரையும் எம் கையில் பிடித்தபடி காத்திருக்கிறோம் உன் வரலாற்றுப் புரட்சிக்காய்......
ஆகவே எழுவாய் எம் தமிழகத் தமிழா புயலாய்.... உ

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

வந்து பார்த்து கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றிகள்!

தூங்குகிறவனை எளிதில் எழுப்பிவிடலாம்! ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை என்ன செய்தாலும் எழுப்ப முடியாது.
இந்த நிலையில் தான் இன்று முழு உலகமும் எமது விடயத்தில் இருக்கிறது என்பது தான் நிஜம்.

உலகில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்பது தான் எல்லாரின் விருப்பம், அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் பயங்கரவாதத்தை எதை கொண்டு நிர்ணயிக்கிறார்கள், இன்றைய தேதியில் பயங்கரவாதமாக தோன்றுபவையின் வேர் என்ன ஏன் எங்கே எதற்கு என்ற கேள்விகளை கொண்டு தீர்க்க முற்பட்டால்…..????????????

ஆனால் நான் சொல்வது ஆயுதம் ஏந்தாத அப்பவி மக்கள், தினம் தினம் செத்து மடிவது எதற்கு? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ஒரு நேர கஞ்சியாவது குடித்து இரவில் அரைவயிறு பசியோடு சரி படுத்து தூங்கி எழு முடியவில்லையே அவர்களால்!

இந்த மனித அவலங்களை பார்க்கும் போது நமது கையாலாகத தனத்தை எண்ணி ரொம்ப வேதனையாக இருக்கிறது. இந்த இடத்தில் கடவுளை மட்டுமே தைரியமாக திட்ட முடிகிறது.

அந்த அங்கலாய்பின் பிரதிபலிப்பு தான்!......